வாய்ப் புண்ணால் எதுவும் சாப்பிட முடியவில்லையா? அதை குணமாக்க சில டிப்ஸ்!

Photo of author

By Rupa

வாய்ப் புண்ணால் எதுவும் சாப்பிட முடியவில்லையா? அதை குணமாக்க சில டிப்ஸ்!
நம்மில் பலருக்கும் வாய்ப்புண் ஏற்படுவது வழக்கமாகும். இந்த வாய்ப்புண் ஏற்பட்டால் சரியாக பேச முடியாது. எந்தவொரு உணவுப் பொருட்களையும் சரியாக சாப்பிட முடியாது. ஏன் சரியாக பல் கூட துலக்க முடியாது.
ஏன் என்றால் வாய்ப்புண்களின் மேல் லேசாக எதாவது பட்டாலும் வலி ஏற்படும். மேலும் உதடுகள் முழுவதும் எரிச்சல் உண்டாகும். மேலும் வாய்ப்புண் இருப்பது நமக்கு அல்சர் இருப்பதை குறிக்கலாம். எனவே இந்த வாய்ப்புண்ணை விரைந்து துணப்படுத்த வேண்டும். இந்த பதிவில் வாய்ப்புண்ணை குணப்படுத்த உதவும் சில மருத்துவ முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வாய்ப்புண்ணை குணமாக்கும் மருத்துவ முறைகள்…
* மஞ்சள் பொடியை எடுத்து ஒரு. டம்ளர் தண்ணீரில் கலந்து கொள்ளவும். பின்னர் இந்த தண்ணீரை பயன்படுத்தி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் இரண்டு நாட்களில் குணமாகி விடும்.
* நெய்யை சிறிதளவு எடுத்து இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் வாய்புண்களின் மேல் தேய்த்து விட்டு படுத்தால் போதும். வாய்ப்புண் குணமாகிவிடும்.
* வாய்ப்புண் குணமாக தினமும் 2 அல்லது 3 கொய்யா மரத்தின் இலைகளை பறித்து மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகி விடும்.
* படிகாரத்தை வறுத்து அதில் கிளசரின் கலந்து அதை வாய்ப்புண்களின் மேல் தேய்த்தால் வாய்ப்புண்கள் குணமாகி விடும்.
* காலை எழுந்த பின்னரும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னரும் மோரை கொண்டு வாய் கொப்பளித்து வர வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.