பல் சொத்தையால் இனிப்பு சாப்பிட முடியலையா? பல் வலி குணமாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Gayathri

பல் சொத்தையால் இனிப்பு சாப்பிட முடியலையா? பல் வலி குணமாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!!

Gayathri

Can't eat sweets because of tooth decay? Just try this to cure toothache!!

அனைவருக்கும் இருக்கின்ற மிகப் பெரிய பிரச்சனை பல் சொத்தை.சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பல் சொத்தையால் அவதியடைந்து வருகின்றனர்.பற்கள் சொத்தையானால் வலி,குடைச்சல்,ஈறு வீக்கம் வாய் துர்நாற்றம் போன்றவை நிகழும்.எனவே பல் சொத்தையில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹோம் ரெமிடியை மறக்காமல் ட்ரை பண்ணுக.

தீர்வு 01:

ஒரு கொத்து வேப்பிலையை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை ஆறவிட்டு வாயை கொப்பளித்தால் பல் சொத்தை வலி கட்டுப்படும்.

தீர்வு 02:

ஒரு பல் வெள்ளைப் பூண்டை தோல் நீக்கி நசுக்கி சொத்தை பல் மீது வைத்து அழுத்தம் கொடுத்தால் பல் வலி நீங்கும்.

தீர்வு 03:

பத்து என்ற எண்ணிக்கையில் கிராம்பு எடுத்து உரலில் போட்டு இடித்து தூளாக்கி கொள்ளவும்.பிறகு இதை பல் சொத்தை மீது அப்ளை செய்தால் வலி குறையும்.

தீர்வு 04:

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வாய் கொப்பளித்து வந்தால் பற்களில் உள்ள கிருமிகள் அழிந்து வலி குணமாகும்.

தீர்வு 05:

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் செம்முள்ளி பொடியை வாங்கி வந்து பற்களை தேய்த்தால் வலி குறையும்.

தீர்வு 06:

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வந்தால் வலி குறையும்.

தீர்வு 07:

10 மிளகு மற்றும் இரண்டு கொய்யா இலையை அரைத்த சொத்தை பல் மீது வைத்து அழுத்தம் கொடுத்தால் பல் வலி நீங்கும்.

தீர்வு 08:

ஒரு கைப்பிடி வேப்பிலைய காயவைத்து பொடியாக்கி மஞ்சள் தூள் மற்றும் பொடித்த உப்பு சேர்த்து பற்களை துலக்கி வந்தால் பல் சொத்தைக்கு தீர்வு கிடைக்கும்.

தீர்வு 09:

ஒரு புகையிலையை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி பல் சொத்தை மீது வைத்தால் புழுக்கள் துடித்துஇறந்துவிடும்.

தீர்வு 10:

ஒரு சிறிய துண்டு புளியில் கல் உப்பு,மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் சேர்த்து உருட்டி பல் சொத்தை மீது வைத்தால் சிறிது நேரத்தில் வலி குறைவதை உணரலாம்.