திருத்தவே முடியாது உங்கள!! மக்கள் பணம் இப்படித்தான் போகுது!! 20,000 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் கைது!! 

Photo of author

By CineDesk

திருத்தவே முடியாது உங்கள!! மக்கள் பணம் இப்படித்தான் போகுது!! 20,000 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் கைது!!

ஏழை எளிய மக்களிடம் லஞ்சம் வங்கி கொண்டு புகாருக்கு நடவடிக்கை எடுப்பது தமிழ்நாடில் இன்னும் சில மாவட்டங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. ஏழை எளிய மக்கள் காவல்துரையினரிடம் தங்களது புகார்களைத் தெரிவிக்க வரும் பொழுது அவர்களிடம் லஞ்சம் வாங்கிகொண்டு மிரட்டும் சில காவல்துறையினர்கள் உள்ளனர். அவ்வாறு  புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க 20,000 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையை சேர்ந்த ஜகதிசன் என்னும் கட்டுமான ஒப்பந்தத்தாரருக்கும் காந்திமதி என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்ககளில் தகராறு இருந்துள்ளது. இது தொடர்பாக ஜகதிசன் மீது காந்திமதி கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான அந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ஜகதிசனிடம் கவரைப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் என்பவர் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் ஜகதிசன் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.  இது குறித்து கவரைப்பேட்டை காவல் நிலையதை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் என்பவரை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் பிடித்து சென்றனர்.