கீழே உட்கார்ந்து எழுந்திருக்க கூட முடியவில்லையா.. எலுமிச்சை பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!! 

Photo of author

By Rupa

கீழே உட்கார்ந்து எழுந்திருக்க கூட முடியவில்லையா.. எலுமிச்சை பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

இந்த நவீன காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கம் மாறுபட்டதை அடுத்து இளம் வயதினருக்கே மூட்டு வலி முழங்கால் வலி உண்டாகுகிறது. இதற்கு கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை சம அளவில் எடுத்துக் கொள்ளாதது தான் முக்கிய காரணம். அதேபோல ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு பல மணி நேரம் வேலை செய்வது உடற்பயிற்சி எடுத்துக் கொள்ளாதது போன்றவையும் அடுத்தடுத்த காரணிகளாக அமைகிறது. இதனை எல்லாம் எளிமையான வீட்டு வைத்திய முறையிலேயே சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் 1டீஸ்பூன்
எலுமிச்சை பழச்சாறு 1டீஸ்பூன்

நமது உடலில் எந்த ஒரு வலி மற்றும் வீக்கத்திற்கும் நல்லெண்ணையை உபயோகிக்கலாம்.
இது ஒரு நல்ல வலி நிவாரணியாக நமது உடலில் செயல்படும்.
எலுமிச்சை பழத்தில் அதிக அளவு சிட்ரிக் ஆசிட் உள்ளது.
இது உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கங்களுக்கு மிகவும் உதவும்.

செய்முறை:
ஒரு கப்பல் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவை இரண்டையும் சம அளவில் தான் எடுக்க வேண்டும்.
இதனை நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.
பின்பு இதனை வலி இருக்கும் இடத்தில் தேய்த்து வர வேண்டும்.
அவ்வாறு தேய்க்கும் பொழுது எலுமிச்சையின் தோலை பயன்படுத்தி தடவும் பொழுது நல்ல மாற்றத்தை காண முடியும்.
ஒரு நாளில் பத்து நிமிடம் வலி இருக்கும் இடத்தில் மசாஜ் செய்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.