புகைப் பழக்தத்தை மறக்க முடியவில்லையா!!! இதை மறக்கச் செய்ய இதோ சில எளிமையான வழிமுறைகள்!!!
தற்பொழுது பெருகி வரும் புகைப் பழக்கத்தை மறக்க சில எளிமையான வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முன்பு புகைப் பழக்கம் என்பது ஆண்களுக்கு மட்டும் இருந்தது. ஆனால் தற்பொழுது சில பெண்களுக்கும் இந்த புகைப் பழக்கம் என்பது ஏற்பட்டு விட்டது. இந்த புகைப் பழக்கத்தை ஒழிப்பதற்கு என்று தனியாக மருந்துகள் தயாரிக்கப்பட்டு வியாபாரம் நன்றாக நடைபெற்று வருகின்றது.
புகை பிடிப்பதால் நுரையீரல் தொற்று ஏற்படுகிறது. ஆனால் புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தாங்களும் கெட்டு தங்கள் அருகில் இருப்பவர்களுக்கும் நுரையீரல் தொடர்பான பிரச்சனையை உருவாக்கி விடுகிறார்கள்.
நாம் ஒவ்வொரு முறையும் திரைப்படம் பார்க்க செல்லும் பொழுது அங்கு முதலில் புகைப் பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்று காணொளி காட்சி திரையிடப்பட்டாலும் யாருக்கும் அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவது இல்லை. சிலர் அதை பார்த்தும் அதன் பாதிப்புகள் தெரிந்தும் விட்டுவிடலாம் என்று நினைத்தாலும் அவர்களால் முடியாது.
புகைப் பழக்கத்தை மறக்க தனியாக மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார்கள். இனி அந்த மாத்திரைகளுக்கு பதிலாக இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் எளிமையான வழிமுறைகளை பின்பற்றுங்கள். புகைப் பழக்கத்தை மறந்து புத்துணர்ச்சியுடன் வாழுங்கள்
புகைப் பழக்கத்தை மறக்க செய்யும் வழிமுறைகள்!!!
* புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தினமும் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். மூச்சுப் பயிற்சி செய்வது நம் உடலுக்கும் நல்லது.
* முச்சுப் பயிற்சி மட்டுமில்லாமல் யோகா, தியானம் போன்றவற்றை கூட செய்து வரலாம்.
* புகைப் பிடிக்கும் பழக்கத்தை மறக்க கேரட், வெள்ளரி போன்ற இயற்கை உணவுகளை சாப்பிட்டு வாயை பிஸியாக வைத்துக் கொள்ளலாம்.
* தினமும் நமது உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்க வேண்டும்.
* செம்பருத்தி டீ, கெமோமில் டீ ஆகிய டீ வகைகளை குடிக்கலாம்.
* புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிட உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். அதே போல நடை பயிற்சியும் மேற்கொள்ளலாம்.
* புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கு அக்கு பஞ்சர் சிகிச்சை மேற்கொள்ளலாம்.
* புகைப் பிடிக்கும் பழக்கத்தை மறக்க அரோமா தெரபி சிகிச்சை முறையை செய்யலாம்.
* புகைப் பிடிக்கும் பழக்கத்தை மறக்க ஹிப்னோதெரபி என்ற சிகிச்சை முறையை பயன்படுத்தலாம்.