மூச்சை அடக்கி முக்கினாலும் மலத்தை வெளியேற்ற முடியலையா? வாழைப்பழம் போல் வழுக்கி வர இந்த டீ குடிங்க!!

0
5

இக்காலத்தில் அனைவரும் சந்திக்கும் பெரிய பாதிப்பு மலச்சிக்கல் தான்.செரிமானப் பிரச்சனை,வாயுத் தொல்லை,பெருங்குடல் அலர்ஜி போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

இன்று மலச்சிக்கலை குணப்படுத்திக் கொள்ள பேதி மாத்திரை,மருந்துகள் போன்றவற்றை மக்கள் பயன்படுத்துகின்றனர்.ஆனால் இதைவிட அத்திப்பழம் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனைக்கு அருமருந்தாக திகழ்கிறது.இந்த அத்திப்பழத்தை கொண்டு மலச்சிக்கலுக்கு தீர்வு காண்பது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)உலர் அத்திப்பழம் – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் பாத்திரம் ஒன்றை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.

ஸ்டெப் 02:

இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு பிறகு ஒரு உலர்ந்த அத்திப்பழத்தை அதில் போட்டு மிதமான தீயில் சூடுபடுத்துங்கள்.

ஸ்டெப் 03:

பானம் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 04:

இந்த உலர் அத்தி பானத்தில் ஒரு தேக்கரண்டி அளவு தூயத் தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பருகினால் கஷ்டப்பட்டு முக்கி மலம் கழிக்கும் நிலை இனி ஏற்படாது.உலர் அத்திப்பழம் மலச்சிக்கலுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் உலர் அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து அரைத்து பேஸ்டாக கொடுக்கலாம்.

உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறது என்றால் உணவில் விளக்கெண்ணையை சேர்த்துக் கொள்ளுங்கள்.சுடுநீர்,தேநீர்,காபி போன்றவை மலச்சிக்கலை குணப்படுத்தும் அருமருந்தாகும்.மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்து வருபவர்கள் இதுபோன்ற இயற்கை முறைகள் மூலம் தீர்வு எட்ட விரும்புவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Previous articleசொறி சிரங்கு புண்களை குணமாக்கும் அதிசய இலை!! பலன் கிடைக்க.. ஜஸ்ட் ஒன் டைம் ட்ரை பண்ணுங்க போதும்!!
Next articleபடிக்கட்டு ஏறினாலே மூச்சு வாங்குதா? குடிக்கும் மோரில் இந்த பொருள் சேர்த்துக்கொள்ளுங்கள் போதும்!!