என்ன செய்தும் சிகிரெட் பழக்கத்தை விடவே முடியலையா? இந்த டிப்ஸ் போதும் இனி புகைப்பழக்கத்திற்கு நோ தான்!!

Photo of author

By Divya

மனிதர்களிடம் இருக்கும் கொடிய பழக்கங்களில் ஒன்று புகைபிடிப்பது.சிகிரெட் புகைப்பவர்கள் மட்டுமின்றி அதை சுவாசிப்பவர்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.புகைப்பழக்கத்திற்கு அடிமையானால் விரைவில் புற்றுநோயாளியாக நேரிடும்.

சிகிரெட் பிடிப்பது தான் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இன்று நுரையீரல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.முப்பெல்லாம் கல்லூரி காலத்தில் தான் சிகிரெட் பிடிக்கும் பழக்கம் தொடங்கியது.

ஆனால் தற்பொழுது பள்ளி பருவ மாணவர்களே போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவது வேதனை அளிக்கும் உண்மையாக இருக்கின்றது.சிலர் புற்றுநோய் அபாயத்தை உணர்ந்து அதில் இருந்து மீள எவ்வளவோ முயற்சி செய்கின்றனர்.ஆனால் என்ன முயற்சி செய்தும் பலனில்லை என்பது தான் பலரின் மனக்குமுறலாக இருக்கின்றது.

புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:-

1)நுரையீரல் புற்றுநோய்
2)முதுகு தண்டுவட பாதிப்பு
3)சிறுநீரக கல் உருவாதல்
4)சுவாசமண்டல பாதிப்பு
5)தண்டுவட தேய்மானம்
6)கல்லீரல் பாதிப்பு
7)தொடர் இருமல்

புகைப்பழக்கம் உருவாக காரணங்கள்:-

1)மன அழுத்தம்
2)டென்ஷன்
3)சிகிரெட் புகைக்க வேண்டும் என்ற ஆசை
4)வயது கோளாறு

புகைப்பழக்கத்தில் இருந்து மீள வழிகள்:

1)தங்களுக்கு புகைபிடிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றினால் நிகோடின் எடுத்துக் கொள்ளலாம்.

2)தங்களுக்கு படித்த செயல்களில் ஈடுபட்டால் புகைப்பிடிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றாமல் இருக்கும்.

3)தியானம்,யோகா,உடற்பயிற்சி செய்தல்,குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுதல் போன்ற செயல்கள் மூலம் புகைப்பழக்கத்திற்கு முடிவு கட்டலாம்.

4)மெல்ல மெல்ல சிகிரெட் பழக்கத்தில் இருந்து மீள முயற்சி செய்ய வேண்டும்.