தொங்கும் தொப்பையை குறைக்க முடியலையா? வெறும் 7 நாளில் தொப்பை கொழுப்பு காணாமல் போகும் அதிசயம் இதோ!!

Photo of author

By Divya

தொங்கும் தொப்பையை குறைக்க முடியலையா? வெறும் 7 நாளில் தொப்பை கொழுப்பு காணாமல் போகும் அதிசயம் இதோ!!

Divya

உங்கள் உடல் ஒல்லியாக இருந்தாலும் வயிற்று பகுதியில் தொப்பை உருவாகி ஆரோக்கியம் மற்றும் அழகை பாழாக்கிவிடும்.எனவே உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைய,உடல் சூடு தனிய வரகு அரிசியில் கஞ்சி செய்து குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)வரகு அரிசி – கால் கப்
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
3)நெய் – ஒரு தேக்கரண்டி
4)பாசி பருப்பு – கால் கப்
5)மிளகு – கால் தேக்கரண்டி
6)பூண்டு பல் – பத்து
7)தேங்காய் துருவல் – கால் கப்
8)உப்பு – தேவையான அளவு
9)தண்ணீர் – தேவைக்கேற்ப

செய்முறை விளக்கம்:-

1.முதலில் கால் கப் வரகு அரிசி மற்றும் கால் கப் பாசி பருப்பை கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.மூன்று முதல் நான்கு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

2.அதன் பின்னர் அடுப்பில் குக்கரை வைத்து சூடாக்க வேண்டும்.அடுத்து நெய் ஊற்றி சூடானதும் ஒரு தேக்கரண்டி வெந்தயம் மற்றும் கால் தேக்கரண்டி மிளகு சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும்.அடுத்து பத்து பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு அதில் போட்டு வதக்க வேண்டும்.

3.பின்னர் ஊறவைத்த வரகரிசி கலவையை தண்ணீரை ஈர்த்துவிட்டு அதில் போட்டு கலந்து விட வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் 5 முதல் 6 கப் தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும்.

4.பின்னர் குக்கர் விசில் நின்றதும் அடுப்பை பற்ற வைத்து கஞ்சியை கலந்துவிட வேண்டும்.அடுத்து கால் கப் அளவிற்கு தேங்காய் துருவி அதில் கொட்டி மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த கஞ்சியை தினமும் குடித்து வருபவர்களின் உடலில் கெட்ட கொழுப்பு சேராது.

இந்த வெயில் காலத்திற்கு ஏற்ற சத்தான கஞ்சியாக இது திகழ்கிறது.தினமும் ஒரு கிளாஸ் வரகரிசி கஞ்சி செய்து குடித்து உடலை சூடாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.