Communication skill : இது ஒரு மனிதர் மற்றொரு மனிதரிடம் தான் நினைக்கக் கூடிய எண்ணங்களை தெளிவாகவும் எந்தவித தயக்கமும் இன்றி புரிய வைப்பதற்கான ஒரு மொழி வடிவமாக உள்ளது. அதாவது கம்யூனிகேஷன் ஸ்கில் பொருத்தவரை எந்த மொழியிலும் ஒருவர் நினைக்கக்கூடிய கருத்தை வெளிப்படையாக மற்றும் எந்தவித தயக்கமும் இன்றி தெரிவிக்க முடியும்.
பலருக்கு தமிழில் தாராளமாக பேச முடிந்தாலும் ஆங்கிலத்தில் பேசும் பொழுது சரியாகத்தான் பேசுகிறோமா நாம் பேசுவதில் ஏதேனும் தவறு இருந்து பிறர் நம்மை பார்த்து சிரித்து விடுவார்களோ என்பது போற்ற பல தயக்கங்கள் உள்ளது. இதனால் கம்யூனிகேஷன் ஸ்கில் என்பது ஆங்கிலத்தில் பேசும் பொழுது உடைந்து விடுகிறது. அதற்கு நாம் என்ன பேச நினைக்கிறோமோ அதை தைரியமாக பேச வேண்டும். ஆரம்பத்தில் சில தவறுகள் இருப்பினும் போகப்போக அந்த தவறுகளும் சரி செய்யப்படும்.
உங்களுடைய கம்யூனிகேஷன் இல்லை மேம்படுத்த முக்கிய வழிகள் இதோ :-
✓ தினமும் வீடியோ ரெக்கார்டர் முன்பு நின்று 5 நிமிடங்கள் பேசிப் பாருங்கள். அப்பொழுது அதில் மீண்டும் பார்க்கும் பொழுது உங்களுடைய தவறுகள் என்ன என்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும் அந்த தவறுகளை அடுத்த நாள் திருத்திக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து செய்யும்பொழுது ஐந்து நிமிடம் என்பது அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும்.
✓ உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடியவர்கள் புதிய மனிதர்கள் போன்றவர்களை அணுகி பேசுவதன் மூலம் உங்களுடைய தயக்கம் நீங்கி செல்லும். எடுத்தவுடன் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என இல்லை தமிழில் பேசினாலும் எந்தவித தயக்கமும் இன்றி பேச முற்பட வேண்டும்.
✓ முக்கியமான விஷயம், எந்த மொழியில் பேசுகிறோம் என்பதை விட என்ன வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும். இந்த வார்த்தை ஆளுமை இருந்து விட்டால் தவறான வார்த்தைகள் வெளிவராது.
✓ நீங்கள் பேசக் கூடியவர்கள் மீது உங்களுக்கு ஏதேனும் பயமோ பதற்றமோ இருந்து விட்டால் உடனடியாக தன் நண்பர்களிடத்தில் பேசுவது போல பேச நினைக்க வேண்டும். குறிப்பாக தன் நண்பர்களிடம் பயன்படுத்தும் சில வார்த்தைகளை இடம் அறிந்து பயன்படுத்துதல் அவசியம்.
✓ சில நேரங்களில் யாரையாவது சந்திக்க செல்லும் பொழுது அல்லது ஏதேனும் ஒரு விஷயங்களுக்கு செல்லும் பொழுது அங்கு என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்பது குறித்து பயிற்சி செய்து செல்வது அந்த சூழலை திறமையாக கையாள உங்களுக்கு உதவும்.
✓ உங்களுடைய குரல் தைரியமாகவும் நீங்கள் பேசுவதில் எந்த தவறும் இல்லை என்ற நம்பிக்கையும் இருந்து விட்டால் உங்களுடைய உடலும் அதற்கு ஏற்றபடி அமைத்தல் வேண்டும். வார்த்தை ஜாலங்களால் மட்டுமே நாம் நினைத்தபடி கம்யூனிகேஷன் ஸ்கில் வளராது நம்முடைய உடல் மொழியும் அது அடங்கும்.
✓ கம்யூனிகேஷன் ஸ்கில்லை வளர்த்துக் கொள்ளக்கூடிய தருணத்தில் இலக்கண பிழைகள் குறித்து கவலை கொள்ளுதல் தேவையில்லாத விஷயம். அது வெறும் பிழையாக மட்டும் தான் இருக்கும் போகப் போக திருத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.