குதிகால் வலி தாங்க முடியலையா? அப்போ இந்த டிப்ஸ் ஒரு மணி நேரத்தில் வலியை குறைக்கும்!!

Photo of author

By Divya

குதிகால் வலி தாங்க முடியலையா? அப்போ இந்த டிப்ஸ் ஒரு மணி நேரத்தில் வலியை குறைக்கும்!!

Divya

ஆண்,பெண் அனைவரும் குதிகால் வலியை அனுபவித்து வருகின்றனர்.அதிக நேரம் நின்றபடி வேலைபார்த்தல்,ஊட்டச்சத்து குறைபாடு,வயது முதுமை போன்ற காரணங்களால் குதிகால் பகுதியில் அதிக வலி ஏற்படுகிறது.இந்த குதிகால் வலியை குணப்படுத்திக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.

1)ஐஸ் தெரபி

வலி இருக்கின்ற குதிகால் பகுதியில் ஐஸ் தெரபி மேற்கொள்ளலாம்.ஒரு கவரில் ஐஸ்கட்டிகளை கொட்டி குதிகால் மீது வைத்து அழுத்தம் கொடுத்தால் வலி குறையும்.குதிகால் வலிக்கு சிறந்த வலி நிவாரணியாக ஐஸ் தெரபி திகழ்கிறது.

2)மசாஜ்

தினமும் ஏதேனும் ஒரு எண்ணெய் கொண்டு குதிகால் பகுதியை மசாஜ் செய்து வந்தால் வலி தானாக குறையும்.

3)உடற்பயிற்சி

குதிகால் வலியை குணப்படுத்தும் உடற்பயிற்சி செய்யலாம்.உங்களுக்கு அடிக்கடி குதிகால் வலி இருந்து கொண்டே இருக்கிறது என்றால் அவ்வப்போது ஓய்வு எடுக்க வேண்டும்.உங்களுக்கு குதிகால் வலி அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியது முக்கியம்.

குதிகால் வலியை குணமாக்கும் வீட்டு வைத்தியங்கள்:

**உப்பு
**தண்ணீர்

நீங்கள் குளிக்கும் நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்துக் கொண்டால் குதிகால் வலியை குணப்படுத்திவிடலாம்.

**எருக்கன் இலை
**விளக்கெண்ணெய்

ஒரு எருக்கன் இலையை எடுத்து நெருப்பில் சிறிது வாட்டிக் கொள்ள வேண்டும்.அடுத்து எருக்கன் இலையை சுற்றி விளக்கெண்ணெய் தடவி குதிகால் மீது அழுத்தம் கொடுத்தால் வலி நீங்கிவிடும்.

**நொச்சி இலை
**தண்ணீர்

முதலில் சிறிதளவு நொச்சி இலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த விழுதை குதிகால் மீது அப்ளை செய்து கட்டினால் வலி குணமாகும்.

**வெது வெதுப்பான தண்ணீர்

இரவு நேரத்தில் ஒரு பக்கெட்டில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி குதிகாலை அதில் வைத்து அழுத்தம் கொடுத்தால் வலி தானாக குறைந்துவிடும்.