பீரியட்ஸ் வலி தாங்க முடியலையா? அப்போ இந்த பழத்துடன் இஞ்சி சேர்த்து சாப்பிடுங்கள் உடனடி பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

பீரியட்ஸ் வலி தாங்க முடியலையா? அப்போ இந்த பழத்துடன் இஞ்சி சேர்த்து சாப்பிடுங்கள் உடனடி பலன் கிடைக்கும்!!

Divya

பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.இந்த மாதவிடாய் வயிற்று வலி குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்ய வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)அன்னாசி பழம் – ஒரு கீற்று
2)இஞ்சி துண்டு – ஒன்று
3)தேன் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு கீற்று அன்னாசி பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் கிண்ணம் எடுத்து நறுக்கிய அன்னாசி பழத் துண்டுகள் மற்றும் இஞ்சி துண்டுகளை போட்டு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

**அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும்.அதன் பிறகு இந்த அன்னாசி பழம் இஞ்சி துண்டை சாப்பிட வேண்டும்.இப்படி செய்தால் மாதவிடாய் வயிற்று வலி குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

**அதன் பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.

**பிறகு அரைத்த வெந்தயத் தூளை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த வெந்தய பானத்தை பருகி வந்தால் மாதவிடாய் வயிற்று வலி குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)விளக்கெண்ணெய்

செய்முறை விளக்கம்:-

**படுத்த நிலையில் வயிற்று பகுதியில் சிறிது விளக்கெண்ணெய் ஊற்றி வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும்.

**இப்படி செய்தால் வயிற்று வலி பாதிப்பு குறையத் தொடங்கும்.அதேபோல் சீமை சாமந்தி பூவில் தேநீர் செய்து பருகி வந்தால் மாதவிடாய் வயிற்று வலி குணமாகும்.