அனைவருக்கும் தாங்க முடியாத வலி என்றால் அது பல்வலி தான்.இந்த பல் வலி வந்துவிட்டால் பிடித்த உணவுகளை கூட ருசித்து உண்ணமுடியாமல் போய்விடும்.சிலர் அதிக பல்வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் பற்களை பிடுங்கிவிடுகின்றனர்.
இந்த தாங்க முடியாத பல்வலிக்கு இயற்கை பொருட்களை கொண்டு எளிதில் தீர்வு காண முடியும்
தேவையான பொருட்கள்:
1)கல் உப்பு
2)வெள்ளை பூண்டு
பயன்படுத்தும் முறை:
முதலில் இரண்டு பல் வெள்ளை பூண்டை எடுத்து தோல் நீக்கி கொள்ளுங்கள்.பிறகு இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்யுங்கள்.
அடுத்து 1/4 தேக்கரண்டி கல் உப்பை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இரண்டு பல் பூண்டை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும்.
இப்பொழுது கல் உப்பு மற்றும் அரைத்த பூண்டு பேஸ்டை ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.அடுத்து பல் துலக்கும் பிரஸ் எடுத்து இந்த பூண்டு பேஸ்டை அப்ளை செய்து பற்களை துலக்குங்கள்.
பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் பற்கள் மற்றும் வாயை சுத்தம் செய்யவும்.இப்படி செய்தால் பல் வலி நீங்குவதோடு பற்கள் உறுதியாக இருக்கும்.
மற்றுமொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:
1)கிராம்பு
2)உப்பு
பயன்படுத்தும் முறை:
10 கிராம்பை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு சிறிதளவு உப்பை 10 மில்லி தண்ணீரில் போட்டு கரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த உப்பு கலந்த நீரில் அரைத்த கிராம்புத் தூளை போட்டு கலந்து பற்களை துலக்கினால் பல் வலி முழுமையாக குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1)மிளகு
2)கிராம்பு
3)கல் உப்பு
4)தேங்காய் எண்ணெய்
பயன்படுத்தும் முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் 5 கரு மிளகு,சிறிதளவு உப்பு மற்றும் 5 கிராம்பு போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு ஒரு கிண்ணத்தில் இந்த பவுடரை கொட்டி சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து பற்களை துலக்கினால் பல் வலி,ஈறு வலி நீங்கி வலிமையாகும்.