மூட்டு வீங்கிக்கொண்டு சுத்தமாக நடக்க முடியவில்லையா!! இதை மட்டும் செய்தால் நொடியில் தீர்வு கிடைக்கும்!! 

Photo of author

By Rupa

இக்காலத்தில் உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.அதிலும் மூட்டு வலி,மூட்டு வீக்கத்தால் பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை பெரும்பாலானோர் அவதியடைந்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் முதியவர்கள் மட்டும் சந்தித்து வந்த மூட்டு வலி பிரச்சனை இன்று சிறு வயதினருக்கும் எளிதில் ஏற்படுகிறது.உடலில் உள்ள எலும்புகள் மற்றும் எலும்பு மஜ்ஜைகள் வலிமையாக இல்லாததால் மூட்டு வலி,மூட்டு வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.

மூட்டு வலியை மருந்து மாத்திரையில் குணப்படுத்தி கொள்ள முயன்றால் அது தற்காலிக தீர்வை மட்டுமே தரும்.நிரந்தர தீர்வு கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

தேவைப்படும் பொருட்கள்:

1)உத்தாமாணி
2)சுக்கு
3)பெருங்காயம்

செய்முறை:

உத்தாமாணி இலையில் டெர்பினாய்டுஸ்,ஃப்ளேவனாய்ட்ஸ் தானின் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்திருக்கிறது.இந்த இலை தேவையான அளவு எடுத்து உரலில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அரைத்த உத்தாமாணி இலை சாற்றை ஊற்றவும்.பிறகு ஒரு துண்டு சுக்கு மற்றும் சிறிதளவு பெருங்காயத்தை இடித்து உத்தாமாணி சாற்றில் போட்டு கொதிக்க வைக்கவும்.

குறைவான தீயில் கொதிக்க வைத்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.இந்த பேஸ்ட்டை ஆறவிட்டு மூட்டு பகுதியில் அப்ளை செய்து வந்தால் வலி,வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் சரியாகும்.

மற்றொரு தீர்வு:

1)பிரண்டை தண்டு
2)நல்லெண்ணெய்

செய்முறை:

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 100 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 10 பிரண்டை துண்டுகளை போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.இந்த எண்ணெயை மூட்டு பகுதியில் அப்ளை செய்து வந்தால் மூட்டு வலி குணமாகும்.

1)கருப்பு எள்
2)நல்லெண்ணெய்

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 100 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கருப்பு எள் போட்டு கொதிக்க விடவும்.இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.இந்த எண்ணெயை மூட்டு பகுதியில் அப்ளை செய்து வந்தால் மூட்டு வலி குணமாகும்.