அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க பயன்படுத்தக்கூடிய ஏடிஎம் மிஷின்களில் சமீப காலங்களாகவே 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே எடுக்க முடிகிறது. இதனால் 100, 200 ரூபாய் நோட்டுகள் எடுக்கக்கூடிய சூழல் வரும் பட்சத்தில் மக்கள் பெரிதளவில் பாதிப்பை சந்திக்கின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
பொதுவாக பலர் தங்களுடைய வங்கி கணக்குகளில் சிறிதளவு பணங்களை மட்டுமே வைத்திருக்கக்கூடிய நிலையில் ஏடிஎம் சென்று அந்த பணத்தை எடுக்க நினைக்கும் பொழுது ஏடிஎம்களில் கட்டாயமாக 500 ரூபாய் மற்றும் 500 தவிர வேறு எந்த நோட்டுகளும் வராததால் தங்களுக்கு தேவையான சிறிய தொகையை எடுப்பதில் மிகப்பெரிய சிக்கல் உருவாகிறது. சில காலங்களுக்கு முன்பு வரை ATM மெஷின்களில் 100 ரூபாய் 200 ரூபாய் நோட்டுகள் அதிக அளவு புழக்கத்தில் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே பல ஏடிஎம் மிஷின்களில் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.
RBI வெளியிட்ட உத்தரவு :-
இனி அனைத்து வங்கிகளின் உடைய ஏடிஎம் மெஷின்களிலும் 100 200 ரூபாய் நோட்டுகள் கட்டாயமாக புழக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் இதை வழக்கமான முறையில் சோதனை செய்ய வேண்டும் என்றும் இந்தியன் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக செப்டம்பர் 30ம் தேதி க்குள் 75% ஏடிஎம் கார்டில் கட்டாயமாக 100 , 200 ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட வேண்டும் என்றும் இந்தியன் ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது. குறிப்பாக அனைத்து வங்கி ஏடிஎம்களுக்கும் மார்ச் மாதம் 2026 ஆம் ஆண்டு வரை தான் கால அவகாசம் கொடுக்கப்படும் என்றும் அதற்குள் 100% ஏடிஎம்களிலும் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட வேண்டும் என்றும் இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.