உங்களால் 1 மணி நேரம் கூட ஆக்ட்டிவாக இருக்க முடியலையா? அப்போ இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்!!

Photo of author

By Divya

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பெரிய பிரச்சனையாக உடல் சோர்வு உள்ளது.இதற்கு முக்கிய காரணம் நாம் பின்பற்றும் உணவுமுறை பழக்கம் தான்.ஆரோக்கியம் இல்லாத உணவை உட்கொள்வதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதில் சிக்கல் உண்டாகிறது.

அது மட்டுமின்றி நிம்மதியற்ற தூக்கத்தின் விளைவாக நாள் முழுவதும் புத்துணர்வின்றி சோர்வு நிலை ஏற்படுகிறது.இந்த உடல் சோர்வு பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள்.

உடல் சோர்வை போக்கும் பூஸ்ட் பவுடர் தயாரிக்கும் முறை:

தேவையனவை:

1)வேர்க்கடலை – 50 கிராம்
2)உளுந்து பருப்பு – 25 கிராம்
3)ஜாதிக்காய் – ஒன்று
4)ராகி – 50 கிராம்
5)கோதுமை – 50 கிராம்
6)பாதாம் பருப்பு – 50 கிராம்
7)பனங்கற்கண்டு – 50 கிராம்
8)பால் பவுடர் – 150 கிராம்

செய்முறை விளக்கம்:

**வேர்க்கடலை,உளுந்து பருப்பு,ராகி,கோதுமை மற்றும் பாதாம் பருப்பை இரும்பு வாணலியில் தனி தனியாக போட்டு வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு இதை நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் கொட்டி கொள்ள வேண்டும்.அடுத்ததாக ஒரு ஜாதிக்காயை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

**பிறகு பால் பவுடர் 150 கிராம் அளவிற்கு அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு 50 கிராம் பனங்கற்கண்டு சேர்த்து நைஸ் பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**இந்த பொடியை ஒரு ஸ்டோரேஜ் கன்டைனரில் கொட்டி சேகரித்து கொள்ள வேண்டும்.இந்த பொடியை தினம் இரண்டு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்கும்.

உடல் களைப்பை போக்கச் செய்யும் சில வழிகள்:

**உடல் களைப்பை உணர்பவர்கள் தினமும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் பருக வேண்டும்.போதிய உடற்பயிற்சியை தினந்தோறும் செய்ய வேண்டும்.

**நீங்கள் தினமும் உட்கொள்ளும் உணவில் ஊட்டச்சத்துக்கள்,தாதுக்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.தினமும் நல்ல உறக்கத்தை அனுபவிக்க வேண்டும்.

**உறவுகள் மற்றும் நண்பர்களுடன் தங்கள் நேரத்தை செலவிடுவதன் மூலம் உடல் சோர்வை தவிர்க்கலாம்.

**இரத்த சர்க்கரை அளவு,உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.உங்களை எப்பொழுதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்.