மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் திருநாள் !

Photo of author

By CineDesk

மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் திருநாள் !

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் திருநாள். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். மனதில் குழப்ப நிலை அகன்று செல்லும். நிதி அருமையாக உள்ளது.

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிப்பதால் வெளி இடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நீடிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமைவதால் சிலருக்கு புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகள் வந்து சேரலாம். கொடுக்கல் வாங்கல்கள் அதி அற்புதமான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தனி முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் குழப்பமின்றி செயல்படுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில பிரச்சனைகள் ஓய்வு. அரசியல்வாதிகள் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் களத்தாமதம் ஆகலாம். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடி அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.