உங்கள் வீட்டில் எலி தொல்லை அதிகம் உள்ளதா? இந்த மூன்று பொருட்கள் இருந்தால் போதும்!

0
248

உங்கள் வீட்டில் எலி தொல்லை அதிகம் உள்ளதா? இந்த மூன்று பொருட்கள் இருந்தால் போதும்!

அனைவருடைய வீட்டிலும் எலி தொல்லை கண்டிப்பாக இருக்கும். ஒரே எலி மட்டும் இருந்தால் கூட வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கடித்து நொறுக்கி விடும். மேலும் எலியை பிடிப்பதற்கு என பல வழிகளை நாமும் மேற்கொள்வோம்.

எலிகள் வருவதை மட்டும் தடுக்க முடியாது. இந்த ஒரு பொருளை வைத்து எலியை எப்படி ஓட ஓட விரட்டுவது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

ஒரு டீஸ்பூன் கோதுமை மாவு, அரிசி மாவு, கடலை மாவு இந்த மூன்றில் ஒரு மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை டீஸ்பூன் நாட்டு சக்கரை அல்லது வெள்ளம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் நன்கு கலந்து அதனை சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கற்பூரத்தை எடுத்து சிறிது சிறிதாக நுணுக்கி நாம் பிடித்து வைத்துள்ள மாவினுள் வைக்க வேண்டும். அந்த உருண்டையின் மேல் சிறிதளவு நாட்டுச்சக்கரை தூவி பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

எலி அதிகம் வரும் இடத்தில் ஆங்காங்கே வைக்க வேண்டும். அப்போது எலி அதனை உண்ட பிறகு வயிறு எரிச்சல் ஏற்பட்டு அந்த இடத்திலிருந்து ஓடிவிடும். எலிக்க ஞாபக சக்தியும் மோப்ப சக்தியும் அதிகம் இருப்பதால் ஒரு முறை இவ்வாறு சாப்பிட்டால் மீண்டும் நம் வீட்டில் பக்கமே வராது.

 

Previous articleமகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் திருநாள் !
Next articleகும்பம் – இன்றைய ராசிபலன்!! நினைத்தது நினைத்தபடி நிறைவேறும் திருநாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here