மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக எண்ணங்கள் அலைமோதும் நாள்!!

Photo of author

By Selvarani

மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக எண்ணங்கள் அலைமோதும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனிபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக எண்ணங்கள் அலைமோதும் நாள். அருகிலுள்ள ஆலயங்களுக்கு சென்று வருவது நல்லது. நிதி ஓரளவிற்கு வந்து சேரும். கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அனுசரிப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

உத்தியோகத்தில் வேலை குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் செல்லும். உத்தியோகம் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும்.குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் நன்மைகளை பெறுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் முக்கிய முடிவுகளை அறிவிப்பார்கள். அரசியல்வாதிகள் முக்கிய புள்ளிகளாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.