தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு இல்லம் களைகட்டி இருக்கும் நாள்!!

0
185

தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு இல்லம் களைகட்டி இருக்கும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்களின் வருகையால் இல்லம் களைகட்டி இருக்கும் நாள். கணவன் மனைவி இடையே ஒரு அதி அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிட மாறுதல் உருவாகும். தொழில் மற்றும் வியாபார விஷயமாக வெளிநாடு அல்லது வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு தேவை என்பதை புரிந்து கொள்வீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு உயரப் பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். உறவினர்கள் நண்பர்கள் வட்டம் விரிவடையும். காதலர்கள் சந்தோஷமாக செலவுகளை மேற்கொள்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். இல்லத்தரசிகளுக்கு உறவினர்கள் ஆதரவாக செயல்படுவது மனதில் ஒரு திருப்தியை கொடுக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவிருச்சகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக சிந்தனை ஊற்றெடுக்கும் நாள்!!
Next articleமகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here