மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

0
85

மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். காலையில் எழுந்தவுடன் தைரியமான பாதையில் செல்வீர்கள். நிதி அருமையாக இருக்கும். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான ஒற்றுமை நிலவும். குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.

உத்தியோகத்தில் தன்னம்பிக்கை கூடும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் சிறப்பான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உடன்பிறப்புகளின் மூலம் சில நன்மைகளை அடைவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் இன்றைய தினம் சில நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள் உயர்வாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் தைரியமாக காணப்படுவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani