மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் பொறுப்பும் பிற்பகலுக்கு மேல் சிறப்பு உண்டாகும் நாள்!!

0
54

மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் பொறுப்பும் பிற்பகலுக்கு மேல் சிறப்பு உண்டாகும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் பொறுப்பும் பிற்பகலுக்கு மேல் சிறப்பு உண்டாகும் நாள். வருமானம் உங்கள் உழைப்பிற்கு ஏற்ப கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் மதிப்புகள் உயரும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்வார்கள். கணவன் மனைவி இடையே அன்யூனியம் கூடும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு எடுக்கும் காரியங்கள் அருமையாக நடைபெறும்.உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவம் கைகொடுக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான முன்னேற்றம் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு பொறுப்புகள் கூடும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani