ஜாக்கிரதை காபி பிரியர்களா?? நீங்கள்!! இதோ உங்களுக்காக காபியை குடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதிர்ச்சிகரமான விளைவுகள்!!

0
127

ஜாக்கிரதை காபி பிரியர்களா?? நீங்கள்!! இதோ உங்களுக்கான குடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதிர்ச்சிகரமான விளைவுகள்!!

காபியை நம் அளவாக குடிக்கும் பொழுது தலைவலியை நீக்குகிறது. இதுவே நாம் காப்பியை அதிகமாக குடிக்கும் பொழுது ஒற்றைத் தலைவலி, நீரிழிவு, உடல் பருமன், உட்பட இன்னும் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

** காபியில் உள்ள காஃபின்  மலச்சிக்கல் பிரச்சனைகளை குறைக்கிறது. எனினும் அளவுக்கு அதிகமான காபி எடுத்துக் கொள்வது தளர்வான மலம் (பேதி), மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.

** ஆய்வுகளின் படி 565mg காஃபின் கொண்ட ஒரு லிட்டர் காபி பருகிய பின்னர், மக்கள் வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

** அளவுக்கு அதிகமாக காஃபின் உட்கொள்ளல் நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்தும் தூண்டுதல் விளைவு காரணமாக ரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த உயர் ரத்த அழுத்தமானது மாரடைப்பு,  பக்கவாதம், போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த காரணமாக அமைகிறது.

** காபியில் உள்ள காஃபின் சதைப்பிடிப்பு பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. காபி குடிப்பதால் ஏற்படும்  ரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சனைகள், சிறுநீரக செயலிழப்பு மற்றும் பிற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

** வேலை சுமை அதிகமாக இருக்கும் சமயங்களில் புத்துணர்ச்சி தருவதற்காக காபியை பருகுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அந்த வகையில் சோர்வை தடுப்பதற்கு நாம் பருகும் இந்த காப்பியானது தூக்கமின்மை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

** காபி, தேநீர் மற்றும் பிற காஃபின் கலந்த பொருட்களை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவும். எனினும் அளவுக்கு அதிகமான காஃபின் மறைமுக உடல் சோர்வுக்கு வழிவகுக்கும்.

** அளவுக்கு அதிகமான காஃபின் எடுத்துக் கொள்வதால் சிறுநீர்ப்பையில் ஏற்படும் தூண்டுதல் விளைவுகள், அடிக்கடி சிறுநீர் கழித்தல்,  மற்றும் அவசரமான சிறுநீர் போக்கிற்கு வழிவகுக்கும்.

** அதிகமான காஃபின் உட்கொள்வதால் ஏற்படும் தூண்டுதல் விளைவு காரணமாக அதிகமான இதயத்துடிப்பு ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை அனைவருக்கும் ஏற்படாது. இதய நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு மட்டும் இது ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

** ஒரு நாளைக்கு 4 கப் காபிக்கு மேல் குடிப்பது ஆயுள் காலத்தை குறைக்கும். காபியில் காஃபின் அதிகம் இருப்பதால் இதனை உட்கொள்பவர்களுக்கு பெரும்பாலும் வயிற்றுப்போக்கு அல்லது அஜீரண கோளாறுகளை ஏற்படுத்துவதாக தெரிகிறது.