மகரம் ராசி – இன்றைய ராசிபலன் !! பயணங்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும் நாள்!

0
176
Capricorn – Today's Horoscope!! An exciting day!
Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகரம் ராசி – இன்றைய ராசிபலன் !! பயணங்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும் நாள்!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயணங்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும் நாள். அயன சயன ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் வரும்.

குடும்ப உறவு அருமையாக உள்ளது. கணவன் மனைவி இன்பச் சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் இருக்கு. பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்தபடி வருமானம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு இருக்கலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பயண வாய்ப்புகள் மேம்பட இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதிய பொறுப்புகள் வந்து சேரும். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான சூழ்நிலை நிலவும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleதனுசு ராசி – இன்றைய ராசிபலன் !! பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்!
Next articleமின் இணைப்புடன் ஆதார் எண்.. வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! அரசு செய்த புதிய ஏற்பாடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here