தனுசு ராசி – இன்றைய ராசிபலன் !! பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்!

0
66
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன் !! பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். ஆகையால் கவனமாக இருப்பது நல்லது.

குடும்ப உறவுகளிடம் பேசுவதில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை இருக்கும் என்றாலும் கவனமாக இருப்பது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் கிடைக்க கூடுமானவரை பாடுபட வேண்டி வரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக கவனங்கள் தேவை.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் மன குழப்பம் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் சற்று இழுபறிகிறது என்ற கவலையுடன் காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையாக இருப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

author avatar
CineDesk