ஆஸ்திரேலியா அணியுடனான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது இந்திய அணி மேலும் இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. மேலும் இந்திய அணி ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வென்று சமநிலையில் உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியன் கேப்டனாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தினார். இந்திய அணி முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் ரோகித் சர்மா தனது சொந்த காரணங்களால் முதல் போட்டியில் பங்கு பெறவில்லை. ஆனால் இரண்டாவது போட்டியில் அணிக்கு திரும்பினார். மேலும் இரண்டாவது போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின் ரோஹித் சர்மா மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் ரசிகர்கள் மீண்டும் பும்ரா கேப்டனாக விளையாட வேண்டும் என ரசிகர் பரவலாக பேய் வருவது தற்போது வைரலாகி வருகிறது.