கோட் படத்தில் கேப்டன்..சம்மதம் தெரிவித்த பிரேமலதா..!!சம்பவம் செய்யப்போகும் வெங்கட் பிரபு!!

0
305
Captain..Premalatha who agreed in Kot film..!!Venkat Prabhu is going to do the incident!!
Captain..Premalatha who agreed in Kot film..!!Venkat Prabhu is going to do the incident!!

கோட் படத்தில் கேப்டன்..சம்மதம் தெரிவித்த பிரேமலதா..!!சம்பவம் செய்யப்போகும் வெங்கட் பிரபு!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது. முன்னதாக தமிழ் புத்தாண்டு அன்று இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை விஜய் சொந்த குரலில் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், கோட் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை AI தொழில்நுட்பம் மூலம் நடிக்க வைக்க வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளாராம். இதற்கு கேப்டனின் மனைவி பிரேமலதாவும் சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக ஏற்கனவே வெங்கட் பிரபு நடிகர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிடம் பேசியிருந்தாராம். அப்போது அவர் விஜயகாந்த் உயிரோடு இருந்திருந்தால், அவரின் தம்பி விஜய்க்காக நிச்சயம் இந்த படத்தில் நடித்து கொடுத்திருப்பார் என்று பிரேமலதா கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதனை தொடர்ந்து தேர்தல் முடிந்த பின்னர் நடிகர் விஜய்யும் பிரேமலதாவை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட இது மறைந்த விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நடிகர் விஜய் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளார் என்றால் அதற்கு காரணம் விஜயகாந்த் தான். 

எனவே தன்னை வளர்த்துவிட்ட ஒரு நடிகருக்கு மரியாதை செலுத்தும் விதமாக விஜய் இதை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கோட் படம் மீது இருந்த எதிர்பார்ப்பு மேலும், அதிகரித்துள்ளது.  

Previous articleநோயாளிகளுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்..அட்ராசிட்டியை தொடங்கிய மதுரை எய்ம்ஸ் வடமாநில மாணவர்கள்..!!
Next articleஒரு நாளைக்கு மட்டும் லட்சங்களில் சம்பளம் வாங்கும் விஜய் டிவி சீரியல் நடிகை..!!