இந்திய அணியின் பந்துவீச்சு வீரர்களை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோஹித் சர்மா!!

0
50
#image_title

இந்திய அணியின் பந்துவீச்சு வீரர்களை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோஹித் சர்மா!!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது பல்வேறு வெற்றிகளைப் பெற்றுக் குவித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியில், ஒவ்வொரு வீரர்களின் தனித்தன்மை பங்களிப்புகள் அதிகம் இருந்ததே, போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புகழ்ந்து கூறியுள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 213 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த 213 ரன்களை வைத்து மட்டுமே வெற்றி பெறுவது அவ்வளவு எளிதானதில்லை. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களின் திறமையான சுழற்சியால் 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இலங்கைக்கு எதிராக நடந்த போட்டியில், சிறந்த பங்களிப்பினை கொடுத்த ஹர்திக் பாண்டியா மற்றும் குல்திப்யாதவை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா 5 ஓவரில் 14 ரன்களை மட்டுமே கொடுத்து, 1விக்கெட் எடுத்தது திருப்தி அளித்ததாகவும். குல்திப் யாதவ் அவரது அற்புதமான பந்துவீச்சால் 4 விக்கெட்டுகள் வீதம் எடுத்தது இப்போட்டியின் பலமாகத் திகழ்ந்தது.

ஹர்திக் பாண்டியா சில வருடங்களாகப் பந்துவீச்சினை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார் எனவும், குல்தீப் யாதவ் அவர்களின் கடினமான உழைப்பால், இந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் எனவும், இது இந்திய அணியின் வெற்றிக்கு ஊன்றுகோலாகத் திகழ்ந்தது என்று ரோகித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார்

author avatar
CineDesk