கேப்டன் உடல்நலம் சீராக இல்லை.. 14 நாட்கள் தீவீர சிகிச்சை!! மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
விஜயகாந்த் அவர்களுக்கு ஆரம்பகட்ட காலத்திலேயே டையாபெட்டிஸ் என தொடங்கி தைராய்டு வரை இருந்தது. இதன் விளைவாக அவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இதன் பின் விஜயகாந்த் அவர்களால் சரியான உச்சரிப்புடன் பேச முடியாமலேயே போனது. அடுத்தடுத்து இவரது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு இவருக்கே உரித்தான பேச்சின் தனித்தன்மை அனைத்தும் செயலிழந்து விட்டது.
இதனை தொடர்ந்து இவரது மகன் மற்றும் பொருளாளராக அவரது மனைவி அதன் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பின் தொடர்ந்தனர். இருப்பினும் அவ்வபோது இவரது உடல்நிலையில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டு அது குறித்தான அறிவிப்புகளும் வெளியாகுவது வழக்கம். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை அன்று இவருக்கு தீவிர காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வட்டாரங்களில் தகவல் பரவியது.
ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேப்டன் அவர்கள் வழக்கமான பரிசோதனைக்கு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஓரிரு நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சி சார்பாக வெளியிட்டனர்.இதனைத் தொடர்ந்து இவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக அடுத்தடுத்து செய்திகள் காட்டுத் தீ போல் பரவியது.
இதுவும் முற்றிலும் பொய், இவ்வாறான வதந்திகளை நம்ப வேண்டாம் என மீண்டும் கட்சித் தலைமை தெரிவித்திருந்தது. இந்நிலையில் கேப்டன் அவர்களின் உடல் நலம் குறித்து இன்று மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் அவர்கள் கூறியுள்ளதாவது,
விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று கூறியுள்ளனர்.
இவ்வாறு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை படி கேப்டன் அவர்கள் மேலும் 14 நாட்கள் மருத்துவமனை சிச்சையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.