சிறுபான்மை மக்களை காக்க வந்தவர் எடப்பாடியார் – புகழாரம் சூட்டிய மாஜி அமைச்சர்!!

0
56
#image_title

சிறுபான்மை மக்களை காக்க வந்தவர் எடப்பாடியார் – புகழாரம் சூட்டிய மாஜி அமைச்சர்!!

கோவை மாவட்டம் கருத்தம்பட்டியில் கிருத்துவ கூட்டமைப்பு மாநாடு நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து கொடுத்தனர்.

இந்த மாநாட்டில் எடப்பாடியாருக்கு 10 அடி உயர மாலை அணிவித்து “சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்” என்ற விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து விழா மேடையில் பேசிய அவர் திமுகவை கடுமையாக சாடினார். சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி தெளித்து ஆட்சிக்கு வந்த திமுக மக்களை துன்பத்தில் தள்ளும் விதமாக சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்டவைகளை உயர்த்தியது தான் மிச்சம். கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத் திட்டங்களை தான் திமுக தற்பொழுது நிறைவேற்றி வருகிறது. இதில் சில நலத் திட்டங்களை முடக்கி திமுக ஊழலில் ஈடுபட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மக்கள் தினந்தோறும் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வருகின்றனர். அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு இருந்த பாதுகாப்பது தற்பொழுது திமுக ஆட்சியில் இல்லை. சிறுபான்மை மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்று திமுக பொய் வேடமிட்டு வருகிறது என்று எடப்பாடியார் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு என்றும் பாதுகாலவர் எடப்பாடியார் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. நம் கோவை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகாலத்தில் இல்லாத வளர்ச்சியை எடப்பாடி பழனிசாமி நமக்கு தந்திருக்கிறார். ஆத்திகடவு – அவிநாசி திட்டம், மேம்பாலம், அரசு மருத்துவமனை, அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிரார். இதனால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் 10 அதிமுக வேட்பாளர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்து கோவை மக்கள் அழகு பார்த்தனர்.

ஆட்சியில் இருந்த போதும் சரி இல்லாத போதும் சரி சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலராக எடப்பாடியார் எப்பொழுதும் இருப்பார். ஆனால் தற்பொழுது தமிழகத்தை ஆளும் திமுகவின் அராஜக செயலால் ஆட்சி மாற்றம் தேவை என்று மக்கள் தெரிவித்து வருகின்றனர். பாஜக கூட்டணியில் இருந்து விலகி உள்ள அதிமுக, எடப்பாடியார் தலைமையில் மக்கள் விரும்பும் மெகா கூட்டணியை விரைவில் அமைக்கும். சட்டமன்ற தேர்தல் எப்பொழுது வைத்தாலும் எடப்பாடியார் தான் தமிழகத்தின் முதலவர் என்று கிருத்துவ கூட்டமைப்பு மாநாட்டில் பேசினார்.