தனியார் பேருந்து மோதியதில் கார் மற்றும் மினி லாரி சேதம்! சேலத்தில் நடந்த கோர விபத்து!
சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி தும்பி பாடி எனும் ஊர் உள்ளது அந்த ஊராட்சிக்குட்பட்ட சந்தை தடம் ஊரில் நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த இடத்தில் கனமழை பெய்ய தொடங்கியது லாரி ஓட்டுநர் வண்டியை நிறுத்துவதற்காக மிகவும் மெதுவாக வண்டியை இயக்கினார். அப்போது பின்னால் ஒரு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. தனியார் பேருந்து அந்த காரின் மீது பலமாக மோதி அந்த கார் ஆனது மினி லாரியில் வந்து அடித்தது.
அந்த கார் மோதியதில் மினிலாரி ஆனது தலை கீழாக விழுந்தது. இந்த விபத்தில் 3 வாகனத்தில் இருந்த நபர்கள் அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். கனமழையின் போது இந்த சம்பவம் நடந்ததை கண்டு அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தலை கீழாக கடந்த லாரியை கிரேன் வைத்து தூக்கினர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் அந்த நெரிசலை சீர் செய்தனர்.