ஏற்காடு மலை சாலையில் சுற்றுலா வந்த காரில் தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம் 

0
243
#image_title
ஏற்காடு மலை சாலையில் சுற்றுலா வந்த காரில் தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்
தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பல சுற்றுலா தளங்களுக்கு பொது மக்கள் தங்களது குடும்பத்துடன் சென்று வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பாச்சலை கபிலேஷ் என்ற கட்டிட பொறியாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் ஏற்காட்டிற்கு வந்துள்ளார்.
ஏற்காடு மலைப் ஆலையில் உள்ள மூன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்ற போது காரில் உள்ள சய்லன்ஸரில் புகை வருவதை கண்ட கபிலேஷ் காரில் இருந்து அனைவரையும் அவசரமாக இறக்கினார். அவ்வாறு அனைவரும் இறங்கிய பின் சில நிமிடங்களிலேயே கார் முழுவதுமாக பற்றி எரிய தொடங்கியது.
உடனே இது குறித்து அவ்வழியாக சென்ற மற்ற சுற்றுலா பயணிகள் சேலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற அவர்கள் போராடி தீயை அணைத்தனர்.
தீயணைப்பு துறையினர் தீயினை அணைத்திருந்தாலும் கார் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இந்த சம்பவத்தால் மலைப்பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, மேலும் ஏற்காடு போலிசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய வருகின்றனர்.
Previous articleஎடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்ல வேண்டும்! அண்ணாமலையை தூண்டி விடும் ஓபிஎஸ் ஆதரவாளர் 
Next articleகணவரை விவாகரத்து செய்த பெண் – காரணமான செல்ல பிராணி