அவிநாசி அருகே கார் டயர் வெடித்து விபத்து!!! சென்னையை சேர்ந்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!!! 

0
134

அவிநாசி அருகே கார் டயர் வெடித்து விபத்து!!! சென்னையை சேர்ந்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் சென்னையை சேர்ந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த தசி என்கிற சிவக்குமார், நாகராஜ், தமிழ் அடியான், மூவேந்திரன் ஆகிய நான்கு பேரும் காரில் கேரளாவில் இருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம் பழங்கரை பகுதி அருகே வந்து கொண்டிருந்த பொழுது காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறிய கார் சாலையின் பக்கவாட்டில் இருந்த சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த சென்னையை சேர்ந்த தமிழ் அடியான் என்பவருக்கும், இசையமைப்பாளராக பணியாற்றி வரும் தசி என்கிற சிவக்குமார் என்பவருக்கும் பலத்த காயம் ஏள்பட்டது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் காரில் பயணம் செய்த இயக்குநர் மூவேந்திரன் என்பவருக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் நாகராஜ் என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. பலத்த காயம் ஏற்பட்ட நாகராஜ், மூவேந்திரன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக திருமுருகன் பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த கார் விபத்தில் உயிரிழந்த தசி என்கிற சிவக்குமார், தமிழ் அடியான் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் காவல் துறையினர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Previous articleஹிட்லரின் ஆட்சியில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு!!! 80 ஆண்டு காலம் நடந்து வந்த வழக்கில் வெளியானது தீர்ப்பு!!!
Next articleஇரண்டு நாட்களில் இவ்வளவு கோடி வசூலா!!? குஷி திரைப்படத்தின் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்!!!