உடல் எடையை குறைக்க உதவும் கேரட் சூப்… எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்…

0
112

உடல் எடையை குறைக்க உதவும் கேரட் சூப்… எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்…

உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைக்க உதவும் கேரட் சூப்பை எவ்வாறு தயார் செய்வது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

உடல் எடை அதிகமாக காரணம் நம் உடலுக்குள் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் அதிகரிப்பது தான். இந்த கெட்ட கொழுப்புகள் உடல் எடையை அதிகரிப்பதுடன் நின்று விடாது. நாளடைவில் இதய நோய் உள்பட பல பிரச்சனைகளை கொண்டு வந்து தருகின்றது.

உடல் எடையை குறைக்க நாம் பல முயற்சிகளை எடுத்திருப்போம். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்கும். அல்லது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் பல மருந்துகளை நாம் சாப்பிட அவை நமக்கு பக்க விளைவுகளை கொடுத்திருக்கும்.

இந்த பதிவில் உடல் எடையை குறைக்க கேரட்டை பயன்படுத்தி சூப் எவ்வாறு தயாரிப்பது அதற்கு என்னென்ன பொருள்கள் தேவை என்று பார்க்கலாம்.

கேரட் சூப் தயாரிக்க தேவையான பொருள்கள்…

* கேரட்
* எண்ணெய்
* பூண்டு
* கிராம்பு
* வெங்காயம்
* கொத்தமல்லி தண்டுகள்
* கொத்தமல்லி இழைகள்
* கருப்பு மிளகு
* எலுமிச்சை சாறு

கேரட் சூப் தயார் செய்யும் முறை…

அடுப்பை பற்ற வைத்து வாணலி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் சிறிதளவு சமையல் எண்ணெய் சேர்க்க வேண்டும். பின்னர் அதில் பூண்டு மற்றும் கிராம்பு சேர்க்கவும்.

பொன்னிறமாக வரும் வரை வதக்கி விட்டு பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

இறுதியாக இதில் கொத்தமல்லி தண்டுகள், துருவிய கேரட் இரண்டையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 2 முதல் 3 நிமிடம் வரை வதக்கி விட்டு இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்க வேண்டும். 15 நிமிடம் மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

15 நிமிடம் கழிந்து திறந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். ஒரு கொதித்த பின்னர் இதில் சிறிதளவு கருப்பு மிளகு, கொத்தமல்லி தழை நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதை இறக்கி சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.

இந்த கேரட் சூப்பை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து விடும். இதனால் உடல் எடை குறையத் தெடங்கும். மேலும் இதய நோய் வராமல் இருக்கும்.

Previous articleகேரளாவில் அதிகரிக்கும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் : அடுத்து என்ன நடக்கும்?
Next articleசுவாச நோய்களை விரட்டும் மூலிகை காஃபி… இதை எவ்வாறு தயார் செய்வது…