உலகப்புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி இயக்குனர் மரணம்! ஆஸ்கர் நாயகனுக்கு பலர் இரங்கல்!

0
138

உலகப்புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி இயக்குனர் மரணம்! ஆஸ்கர் நாயகனுக்கு பலர் இரங்கல்!

உலகம் முழுவதும் சிறியவர் முதல் முதியவர்கள் வரை நகைச்சுவையாக ரசிக்க வைக்கும் கார்ட்டூன்கள் “டாம் அண்ட் ஜெர்ரி” ஆகும். இந்நிகழ்ச்சியை விரும்பாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்தளவிற்கு உலக மக்களின் மனதில் இடம்பிடித்த நிகழ்ச்சி ஆகும். இதில் பூனை மற்றும் எலியை சண்டையிடும் போட்டியாளர்களாக அதன் இயக்குனர் ஜீன் டெய்ச் உருவாக்கியிருப்பார்.

அனைவரும் ரசிக்கும் வகையில் எலி மற்றும் பூனையின் சேட்டைகளை நவீன காலத்து டெக்லாஜியாக மாற்றி வேடிக்கையான முறையில் வெளியிட்டு வெற்றிகண்டவர் இயக்குனர் ஜீன் டெய்ச். இந்த கார்ட்டீன் தொடர் 1940 ஆம் ஆண்டு வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பார்பெரா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. 1940 முதல் 1958 வரை இவர்கள் இருவரும் எழுதி இயக்கி வந்தனர்.

இதையடுத்து இதற்கு உயிர்கொடுக்கும் விதமாக “டாம் அண்ட் ஜெர்ரி” கதையை இயக்கி வந்தவர்தான் ஜீன் டெய்ச். இவர் தனது ஆரம்ப காலத்தில் இராணுவ வீரராகவும் பின்னர் வட அமெரிக்காவில் விமானியாகவும் பணியாற்றி வந்தார். 1944 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக வேலையிலிருந்து விலகி கார்ட்டூன் சித்திரங்களை வரைந்து வந்தார். வித்தியாசமான கார்ட்டூன் சித்திரங்கள், ஓவியங்கள், கதைகள் போன்ற சிறப்பான படைப்புகளுக்கு ஆஸ்கர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் ஜீன் டெய்ச் பெற்றுள்ளார்.

1960 ஆண்டில் இவரது கார்ட்டீன் ஆதிக்கம் எழுச்சியுற்றது எனலாம். அந்த காலகட்டத்தில் டாம் அண்ட் ஜெர்ரி மற்றும் பாப்பாய் என்ற புகழ்மிக்க கார்ட்டூன் சித்திரங்களை உலகம் முழுக்க மக்களை ரசிக்க வைத்தார். இதுவரை 13 டாம் அண்ட் ஜெர்ரி கதைகள் இவரது இயக்கத்தில் வெளிவந்துள்ளன. சத்தான கீரையை சாப்பிட்டால் உடலுக்கு சக்தி ஏறும் என்று பாப்பாய் நிகழ்ச்சியின் மூலமாக குழந்தைகள் மனதில் பதிய வைத்தார். வயதின் முதிர்ச்சியால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ப்ராக் நாட்டிலுள்ள தனது வீட்டிலேயே கடந்த 16 ஆம் தேதி உயிரிழந்தார். “மன்றோ” என்னும் பிரபல கார்ட்டூன் குறும்படத்திற்காக ஆஸ்கார் விருது வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகுடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா! உலகம் முழுவதும் 1.70 லட்சம் உயிரிழப்பு!
Next articleஊரடங்கு உத்தரவால் கள்ளக்காதலி வீட்டில் தங்கிய டாக்சி டிரைவர்! இடையூறாக இருந்த மகனை கொன்ற அதிர்ச்சி சம்பவம்!