அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து: அமைச்சர் செல்வராஜ் விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு!

0
509
#image_title

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து: அமைச்சர் செல்வராஜ் விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, எம்.ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 11 பேர் மீதான வழக்கையும் ரத்து செய்தார்.

மேட்டுப்பாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே செல்வராஜ் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் அமுதாவை சந்தித்தபோது வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக அமுதா அளித்த பதிலில் திருப்தி இல்லை எனக் கூறி கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தகவலறிந்து நகராட்சி தலைவர் அங்கு வந்தபோது இரு தரப்பினரிடமும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து நகராட்சி ஆணையர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் ஏ.கே செல்வராஜ் உட்பட அதிமுக உறுப்பினர்கள் 28 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி செல்வராஜ் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

அமைச்சர் பெரிய கருப்பனுக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் விதி மீறல் வழக்கையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தேர்தல் விதி மீறி பிரச்சாரம் செய்ததாக அமைச்சர் பெரிய கருப்பன் உள்ளிட்ட இரண்டு பேர் மீது வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி அமைச்சர் பெரிய கருப்பன் உள்ளிட்ட இரண்டு பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Previous articleதேர்தல் பத்திரம் ரத்தால் திமுகவிற்கே இழப்பு: அண்ணாமலை அதிரடி!!
Next article“இனி கொலை குத்துதான்.. அதிரடி அரசியல் உறியடித்தால் பதவி” : சர்ச்சை நாயகன் மன்சூர் அலிகான்!!