மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது வழக்கு பதிவு!! அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் பாஜக!!

Photo of author

By Rupa

மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது வழக்கு பதிவு!! அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் பாஜக!!

Rupa

Case filed against Union Minister of State L Murugan!! BJP will face controversies in succession!!

மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது வழக்கு பதிவு!! அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் பாஜக!!

இந்த நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.அந்தவகையில் இரு தினங்களுக்கு முன்பே வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்தது.இதில் பலரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளிவந்தது.

அந்த வரிசையில் அண்ணாமலை வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று எதிர் கட்சியை சேர்ந்தவர்கள் புகார் அளித்தனர்.இது குறித்து தற்பொழுது அண்ணாமலை சார்பாக சரியான விளக்கம் அளிக்கப்பட்டு அவரது வேப்பமனுவானது தற்பொழுது ஏற்கப்பட்டுள்ளது.இதனையடுத்து நீலகிரி தொகுதியில் பாஜக சார்பாக மத்திய இணையமைச்சர் ஆக உள்ள எல் முருகன் போட்டியிட உள்ளார்.தற்பொழுது இவர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் நெருங்கும் வேலையில் அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப தான் ஒவ்வொரு கட்சிகளும் செயல்பட வேண்டும்.அந்த வகையில் பிரச்சாரம் தொடங்குவது முதல் பொதுக்கூட்டம் என அனைத்திற்கும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.ஆனால் எல் முருகன் அவர்கள் நீலகிரியில் உள்ள கடநாடு என்ற கிராமத்தில் 100 நபர்களுடன் சென்று பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

இது குறித்து எந்த ஒரு அனுமதியும் தெர்தக் ஆணையத்திடம் அவர் வாங்கவில்லை. இதனை அறிந்த பறக்கும் படை அலுவலர் அங்குள்ள காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.இதனையொட்டி மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது தேர்தல் நடத்தை வீதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.