கொரோனா தொற்று காரணமாக பல கல்லூரிகள் கொரோனா தனிமை படுத்தும் இடமாக மாற்றப்பட்டதால் வகுப்புகள் நடக்க வாய்ப்பில்லை.எனவே தமிழகத்தில் அனைத்து பட்டப் படிப்புகளுக்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்பு உள்ளிட்ட அனைத்து பட்டப் படிப்புகளுக்கான இறுதி ஆண்டு பருவத்தேர்வை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த் வழக்கு தொடுத்துள்ளார்.அந்த மனுவில் கல்லூரிகள் அனைத்தும் கொரோனா தனிமை படுத்துதல் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளதால் கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை.
கொரோனா தொற்று செப்டம்பரில் தான் குறையும்.மேலும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் தான் திறக்க வாய்ப்பு இருப்பதால்.இறுதி ஆண்டு மாணவர்கள் அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தேர்வு நடத்துவது பற்றி பல்கலைக்கழகங்களும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை.மேலும் தேர்வுகளை இப்போதைக்கு நடத்த வாய்ப்பு இல்லை என்பதால் அனைத்து பட்டப் படிப்புகளுக்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.