தமிழகத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இயங்கிவரும் நியாயவிலைக் கடைகளில் அரிசி டன் கணக்கில் பாதிக்கப்படுவதாகவும், அதிக விலைக்கு விற்கப் படுவதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளனர். சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் தனியார் குடோன் ஒன்றில் கால்நடைகளுக்கான பதுக்கி வைத்திருந்த 31.5 ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டனர்.
மேலும் , இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி அருகே வாகனத்தில் கடத்தப்பட்ட 9 டன் அரிசியும் , மதுரையில் செயல்பட்டு வரும் ஆலை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 10 – டன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டனர்.
ஏழைகளுக்கு உதவும் வகையில் அரசு இலவசமாக அரிசி கொடுத்து வரும் அரிசியை அதிக விலைக்கு vவிற்க்கபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கூறியுள்ளனர். மேலும் இதுபோன்ற ஊழலுக்கு நியாயவிலைக் கடைகளில் ஊழியர்களே உடந்தையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், நியாயவிலை கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .அந்த மனுவில் ரேஷன் கடை உணவுப் பொருட்கள் கள்ள சந்தையில் விற்கப்படுவதை தடுக்க கண்காணிப்பு தேவைப்படுவதாக கூறியுள்ளனர்.
இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.