தமிழக பாஜக தலைவர் உட்பட 700 நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு.!!

0
132

நேற்று கோவில்களை திறக்க போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உட்பட 700 நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் முன் போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொற்றுநோய் தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் சுமார் 700 நிர்வாகிகள் மீது சென்னை கடற்கரை போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், கோவையில் போராட்டம் நடத்திய கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீது பந்தயசாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில், அனைத்து சினிமா தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், கோவில்களை மட்டும் ஏன் அவர்கள் மூடி வைத்திருக்கவேண்டும். மேலும், கோவில்களில் ஏற்படும் கூட்டத்தை வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவில் திறந்து இருந்தால் மட்டுமே சரி செய்ய முடியும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதனையடுத்து நேற்று காலை தமிழகம் முழுவதும் அனைத்து திருக்கோயில்களையும் திறக்க வலியுறுத்தி பாஜக சார்பில் முக்கிய கோயில்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி, சென்னை காளிகாம்பாள் கோயில் அருகே நடந்த போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மக்கள் குரலுக்கு செவிசாய்க்க விடில் பத்து நாட்களுக்குப் பின் அரசு ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார். இந்த நிலையில் பாஜக தலைவர் உட்பட சுமார் 700 நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.

Previous articleBREAKING: 24 மணி நேரத்தில் 21,000 உயிரிழப்புகள்! மீண்டும் ஊரடங்கிற்கு தள்ளப்படுமா?
Next articleலடாக்கில் திடீர் நிலநடுக்கம்! அச்சத்தில் பொதுமக்கள்!