திருமாவளவன் மீது வழக்கு பதிவு – போலீசார் தகவல்!

Photo of author

By Parthipan K

திருமாவளவன் மீது வழக்கு பதிவு – போலீசார் தகவல்!

Parthipan K

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு. ஏனெனில், நேற்று மனுதர்ம நூலை தடை செய்ய கோரி சென்னையிலுள்ள வள்ளுவர் கோட்டத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ளதாலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டு உள்ளதாலும், இந்த நூலை ரத்து செய்யும்படி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 250 நபர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மனுதர்ம நூலை எரித்து ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவர் மீதும் ‘சட்டவிரோதமாக கூடுதல்’ என்ற பிரிவின் படியும், ‘சட்டத்தை மதிக்காமல் இருத்தல்’ என்ற பிரிவின் படியும், ‘நோய்தொற்று பரவல் சட்டம்’ என்னும் பிரிவின் படியும் வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளது.