QR CODE கூப்பன் மூலம் பணம் விநியோகம்! காங்கிரஸ் வெற்றி முறைகேடானது! குமாரசாமி குற்றச்சாட்டு!

Photo of author

By Sakthi

QR CODE கூப்பன் மூலம் பணம் விநியோகம்! காங்கிரஸ் வெற்றி முறைகேடானது! குமாரசாமி குற்றச்சாட்டு!
நடந்து முடிந்த கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது முறைகேடானது. கியூ.ஆர் கோடு மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
நடந்து முடிந்த கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலில் காங்கியஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா அவர்களும் துணை முதலமைச்சராக டி கே சிவக்குமார் அவர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றி முறைகேடான வெற்றி என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி அவர்கள் ” காங்கிரஸ் கட்சி வாக்காளர்களுக்கு கியூ.ஆர் கோடு கூப்பன் வழங்கினர். அதை ஸ்கேன் செய்தால் 3000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை பெறலாம் எனவும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் இந்த தொகை அனைவருக்கும் கிடைக்கும் எனவும் சொல்லி தேர்தல் பரப்புரையில் வாக்கு சேகரித்தனர்” என குற்றச்சாட்டு வைத்துள்ளார்.