மத்திய மற்றும் மாநில அரசுகள் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்து வரும் நிலையில் ரொக்க பரிவர்த்தனைக்கு சில விதிகளை வகுத்திருக்கிறது. அந்த விதிகளை மீறுபவர்களுக்கு 100% அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
வருமான வரி சட்டம் 1961 கீழ் ரொக்க பரிவர்த்தனை செய்வதற்கான ஒரு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ரொக்கமாக கொடுக்கப்படும் பணத்திற்கான விளக்குகள் கொடுப்பனவுகள் செலவுகள் போன்றவற்றையும் வருமானவரித்துறை தடை செய்கிறது. இதுபோன்ற வரம்பிற்கு மீறிய ரொக்க பரிவர்த்தனைகளை செய்யும் பொழுது வருமானவரித்துறையானது அதற்கு நிகரான 100 சதவிகித அபராதத்தை விதிக்கும் என்றும் இந்த சட்டம் விளக்குகிறது.
வருமானவரித்துறையின் ரொக்கம் தொடர்பான விதிகள் :-
✓ பிரிவு 269 SS :-
எந்த ஒரு நபரும் கடன் அல்லது வைப்புத்தொகை அல்லது வேறு குறிப்பிட்ட தொகையை ரூ.20,000 அல்லது அதற்கு மேல் இருந்தால் அதனை ரொக்கமாக வர முடியாது. மேலும் அந்த குறிப்பிட்ட தொகையானது அசையா சொத்து பரிமாற்றமாக இருந்தால் அதற்குரிய முன்பணம் பெறுவதை இந்த சட்டமானது குறிக்கிறது.
✓ பிரிவு 269 ST:-
ஒரு நபர் வரி செலுத்த கூடியவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த நபர் கட்டாயமாக நாளொன்றுக்கு 2 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமாக பெறுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
ஒருவேளை திருமணம் பிறந்தநாள் போன்ற எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் ஒரு நாளில் ஒரு நபரால் 2 லட்சம் ரூபாய் தொகைக்கு மேல் ரொக்கமாக எடுக்க முடியாது என்பதை திட்டவட்டமாக இந்த பிரிவு தெளிவுபடுத்துகிறது.
✓ பிரிவு 269 T :-
அரசினுடைய வங்கி தபால் அலுவலகம் சேமிப்பு வங்கி என எந்த விதியில் இருந்தும் எந்த ஒரு நபருக்கும் 20000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக செலுத்துவதற்கான அனுமதி இல்லை என்பதை கடன் அல்லது வைப்புத் தொகையை திருப்பி செலுத்துதல் விரிவானது தெளிவுபடுத்தியுள்ளது.
குறிப்பு :-
மேல்கூறப்பட்டவைகளை மீறும் பொழுது எவ்வளவு தொகையை செலுத்துகிறோமோ அதற்கு இணையான அபராதமானது 100% ஆக வசூலிக்கப்படும் என்றும் வருமானவரித்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.