SC /ST என்ற சாதி பிரிவில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிய பின் அவர்கள் SC/ ST பிரிவின் கீழ் வர மாட்டார்கள் என்றும் அவர்களுக்கான சட்டம் மற்றும் தள்ளுபடி அரசு சார்ந்த சலுகைகள் என எதுவும் கிடைக்காது என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
2021 ஜனவரி மாதத்தில் பாஸ்டர் ஆக பணியாற்றிய சிந்தாரா ஆனந்த் மற்றும் அவருடன் இருந்தவர்கள் ஜாதியை அடிப்படையாகக் கொண்டு துன்புறுத்தியதாக சான்றோ போலீசில் புகார் அளித்தனர் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் SC/ST தடுப்புச் சட்டத்திற்கு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொழுது இந்த வழக்கானது நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரக்கூடிய இந்த வழக்கிற்கு சமீபத்தில் நீதிபதிகள், ஒருவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பின்பு அவருக்கு சாதி சார்ந்த SC/ST தடுப்புச் சட்டம் உதவாது என்றும் அவர்கள் இந்த சாதிக்குள் அடங்க மாட்டார்கள் என்றும் தெரிவித்ததோடு இதனை பரிசீலனை செய்யாமல் வழக்கு பதிவு செய்த போலீசார் மீது நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்பு தங்களுடைய சாதியை யாராலும் குறிப்பிட முடியாது என்றும் சாதியை உரிமை கோருவதும் சட்டத்திற்கு புறம்பானது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்து இருக்கின்றனர்.
ஒருவர் மதம் மாறிய பின்பு அந்த சாதி தனக்கு சட்டத்தின் மூலம் பாதுகாப்பு வழங்கும் என நினைக்கக் கூடாது என்றும் இனி கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய எஸ்சி எஸ்டி களுக்கு அந்த பாதுகாப்பு சட்டம் பயன்படாது என்றும் அதன் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.