இவ்வாறு நடந்து கொண்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
நம் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலும் வீடுகளில் ஆடு ,மாடு,கோழி என வளர்பது வழக்கம் தான்.அவைகளை வெறும் பொழுபோக்கு நோக்கில் வளர்க்காமல் லாபத்தின் அடிப்படையில் தான் வளர்க்கின்றனர்.அவ்வாறு வளர்க்கப்படும் மாடுகளை காலையில் அவிழ்த்து விட்டு விடுகின்றனர்.
அவ்வாறு அவிழ்த்து விடும் மாடுகள் அனைத்தும் கூட்டமாக சாலைகளில் சுற்றி திரிகின்றனர்.அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றது.அதனால் அதனை தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
நகராட்சி நிர்வாகம் பலமுறை சாலைகளில் சுற்றும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் தற்போது ஓசூர் மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் பறிமுதல் செய்யப்படும்.
அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் மாடுகளுக்கு ரூ 1000 முதல் ரூ 3000 வரை அபராதம் விதிக்க படும் என தெரிவித்துள்ளனர்.முன்னதாகவே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் அபராதத் தொகையாக ரூ 1500 முதல் ரூ 3000 வரை அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.