உற்பத்தித் துறையின் வளர்ச்சியால் இந்திய பொருளாதாரம் ஆறு காலாண்டுகளில் மிக உயர்ந்த 8.2% வளர்ச்சி!

Indian economy grows at highest 8.2% in six quarters due to growth in manufacturing sector!

2025–26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு (Q2 FY26) ஜிடிபி (GDP) விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதில், இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்ப்புகளை மீறி 8.2% வளர்ச்சி கண்டுள்ளது — இது கடந்த ஆறு காலாண்டுகளில் மிக உயர்ந்த வளர்ச்சியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பு தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட அறிக்கையின்படி: உண்மை ஜிடிபி (Real GDP) – 2025–26 நிதியாண்டின் Q2 காலாண்டில் ₹48.63 லட்சம் கோடி. கடந்த ஆண்டு இதே காலாண்டில் (Q2 FY25) இது … Read more

பாகிஸ்தான் இன்ஃப்ளூயன்சரை பிராண்டு தூதராக நியமித்த மலபார் கோல்ட்? – சமூக ஊடகங்களில் எழுந்த எதிர்ப்பு 

Malabar Gold Appointed Pakistani Influencer

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனமான மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ்,இங்கிலாந்தில் நடந்த புதிய ஷோரூம் திறப்பு விழாவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளது.இந்த நிகழ்ச்சிக்காக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த UK இன்ஃப்ளூயன்சர் அலிஷ்பா காலித் அழைக்கப்பட்டதால், சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. சம்பவத்தின் தொடக்கம் 2025 செப்டம்பர் 6 அன்று, இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் மலபார் கோல்ட் தனது விரிவாக்கப்பட்ட ஷோரூமின் திறப்பு விழாவை நடத்தியது.இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் பிரதம விருந்தினராக … Read more

இந்தியாவின் 2025-26 நிதியாண்டு முதல் காலாண்டு (Q1) வளர்ச்சி! எதிர்பார்ப்புகளை மீறிய உயர்வு

India's first quarter (Q1) growth data for the financial year 2025-26

இந்தியாவின் GDP 7.8% உயர்வு, எதிர்பார்ப்புகளை மீறி உயர்ந்துள்ளளது. இந்தியாவின் 2025-26 நிதியாண்டு முதல் காலாண்டு (ஜூன் 30, 2025 முடிவடைந்த காலாண்டு) மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8% வளர்ச்சி கண்டுள்ளது என்று ஆகஸ்ட் 29 அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான நிபுணர்கள் 6.5%–7% வளர்ச்சியை மட்டுமே கணித்திருந்த நிலையில், இது அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறியுள்ளது. கடந்த ஆண்டு அதே காலாண்டில் 6.5% வளர்ச்சியும், முந்தைய காலாண்டில் (Q4 FY25) 7.4% வளர்ச்சியும் … Read more

ரயில் பயணிகளுக்கு புதிய இலவச OTT சேவை!

இந்திய ரெயில்வே புதிய ‘RailOne’ சூப்பர் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இலவசமாக OTT மூலமாக படம், தொடர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் பார்க்கலாம். 2025 ஜூலை 1 ஆம் தேதி அறிமுகமான ‘RailOne’ எனும் புதிய சூப்பர் ஆப், தற்போது பயணிகளுக்கு இலவச OTT (Over-The-Top) பொழுதுபோக்கு சேவையை வழங்குகிறது. இதன் மூலம் ரெயில் பயணத்தின் போது திரைப்படங்கள், வலைத் தொடர்கள், ஆவணப்படங்கள், ஆடியோ நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவற்றை இலவசமாக அனுபவிக்கலாம். RailOne – ஒரே ஆப்பில் … Read more

இயற்கையாக வீட்டை குளிர்ச்சியாக்கும் ஹை டெக் பெயிண்ட் 

High-tech paint that naturally cools the house

சிங்கப்பூரில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ஒரு புதிய ‘அதிநவீன’ பெயிண்ட், வீட்டை மின்சாரம் இல்லாமலேயே இயற்கையாக குளிர வைக்கும் என்று கூறப்படுகிறது. அது எப்படியென்றால் — உடல் சுரப்பதைப் போல, இந்த பெயிண்ட் “வியர்வை சுரக்கிறது!” என்று அதற்கான விளக்கம் கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன? சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு, சிமெண்ட் அடிப்படையிலான ஒரு புதிய பெயிண்ட் உருவாக்கியுள்ளனர். இது சாதாரண குளிர் பெயிண்டுகளுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது. இது நீர் … Read more

மரணத்திற்கு பிறகு மனிதன் உயிர் வாழ முடியுமா? ஜெர்மன் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! கட்டணம் 2 கோடி 

Can a human survive after death? Announcement made by a German company! Fee 2 crores

ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட Tomorrow Bio என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம், மரணித்த பிறகு மனிதர்களை மீண்டும் உயிர்ப்பிக்கக்கூடிய வகையில் அவர்களின் உடலை உறைபசை (Cryopreservation) செய்யும் சேவையை வழங்குகிறது. செலவு எவ்வளவு? இந்த சேவைக்காக நிறுவனத்தின் சார்பில் கூறப்படும் கட்டணம் அமெரிக்க டாலர் 2 லட்சம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.74 கோடி). இந்த தொகைக்கு, ஒருவர் இறந்த உடனே உடலை மிகக் குறைந்த வெப்பநிலையில் உறையவைக்கும் செயல் தொடங்கப்படுகிறது. இது செல்கள் … Read more

அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் விமானி? – அமெரிக்க ஊடகம் வெளியிட்ட செய்திக்கு AAIB மறுப்பு

Ahmedabad Plane Crash

அகமதாபாத் விமான விபத்தில் விமானி தான் காரணம் என கூறி அமெரிக்க ஊடகம் வெளியிட்ட செய்தியை, விபத்திற்கான விசாரணையை மேற்கொண்டு வரும் இந்திய விமான விபத்து விசாரணை அமைப்பு (AAIB) தெளிவாக மறுத்துள்ளது. அமெரிக்க ஊடகத்தின் குற்றச்சாட்டு கடந்த மாதம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 2 நிமிடங்களுக்குள் கீழே விழுந்து, தீப்பற்றி விபத்தில் சிக்கியது. இதில் 270 பயணிகள் உயிரிழந்தனர், இது கடந்த காலங்களில் இந்தியா சந்தித்த மிகப்பெரிய விமான விபத்துகளில் … Read more

Youtube கொண்டு வந்த புது விதிமுறைகள் என்னென்ன? யாரெல்லாம் இதனால் பாதிக்கப்படுவார்கள்?

What are the new rules introduced by YouTube? Who will be affected by this?

இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பமான நேரத்தில் நிறைய பேர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது பலர் Youtube, Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை விளையாட்டுக்காக( ஒரு ஜாலிக்காக) பதிவு செய்து வெளியிட்டு வந்தனர். நாளடைவில் அந்த வீடியோக்கள் வைரல் ஆகி Youtube, Facebook போன்ற வலைத்தளங்கள் மக்களின் வீடியோவை அங்கீகரித்து அவர்களுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் நிறைய பேர் பயனடைந்தனர். பலர் தங்கள் அன்றாட வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக Youtube ல் … Read more

நாளை நடக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தம்! அரசு ஊழியர்கள் பங்கு பெற்றால் என்ன நடக்கும்? தலைமை செயலாளர் எச்சரிக்கை!

Nationwide strike tomorrow! What will happen if government employees participate? Chief Secretary warns!

நாளை (8.7.2025) இந்தியா முழுவதும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும், தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட 4 சட்ட மசோதாக்களை உடனடியாக அரசு கைவிட வேண்டும் என்கிற மொத்தம் 17 கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடப்போகிறார்கள். வங்கிகள் கூட இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பேருந்து ஊழியர்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு … Read more

ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களுக்கு தனியான நம்பர் பிளேட் சிஸ்டம் – மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அரசு பசுமை எரிசக்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்நிலையில், ஹைட்ரஜன் எரிபொருளால் இயக்கப்படும் வாகனங்களுக்கு தனி வகையான பதிவு எண்  (நம்பர் பிளேட்) வடிவமைப்பு ஒன்றை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இந்த முன்மொழிவு மூன்று வகை வாகனங்களுக்கும் பொருந்தும்: வணிக வாகனங்கள் தனிப்பட்ட (பிரைவேட்) வாகனங்கள் வாடகை வாகனங்கள் (ரென்டல் காப்கள்) வணிக ஹைட்ரஜன் வாகனங்களுக்கு: நம்பர் பிளேட்டின் மேல் பகுதி பச்சை, கீழ் பகுதி நீலம் உள்ளிட்ட நிறங்கள் கொண்டதாக இருக்கும். … Read more