கறிக்காக லாரியில் கடத்தப்பட்ட பூனைகள்! பன்றி மற்றும் ஆட்டு இறைச்சியுடன் கலக்க கொண்டு சென்றதாக தகவல்
சீனா நாட்டில் இறைச்சிக்கு பயன்படுத்த லாரிகளில் சுமார் 1000 பூனைகள் கடத்தப்பட்ட நிலையில் அந்த பூனைகள் தற்பொழுது மீட்கப்பட்டு உள்ளது. இந்த பூனைகளின் இறைச்சியை ஆடு மற்றும் பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்ய கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நம் நாட்டில் ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் போன்ற உயிரினங்களை இறைச்சியாக பயன்படுத்தும் பழக்கம் மக்கள் மத்தியில் உள்ளது. அதுவே மற்ற நாடுகளை எடுத்துப் பார்க்கும் பொழுது பாம்பு முதல் கரப்பான் பூச்சி வரையிலும் இறைச்சியாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வாறு பல வித்தியாசமான இறைச்சி உணவுகளை விற்பனை செய்யும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது என்று கூறினால் மிகையாகாது. சீனாவில் பல வித்தியாசமான இறைச்சி உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தேள் லாலிபாப், புழு சாக்லேட் ஐஸ்கிரீம், ஸ்நேக்(பாம்பு) வைன், கரப்பான் கட்லட் போன்ற வித்தியாசமான உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அதே போல தவளை, பாம்பு, மாடு, கோழி, பன்றி போன்ற விலங்குகளையும் இறைச்சியாக சீனா நாட்டினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இறைச்சிக்காக 1000 பூனைகளை வாகனங்களில் கடத்தி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனா நாட்டின் ஜங்ஜியாகங்க் பகுதியில் இறைச்சிக்காக பூனைகள் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் விலங்கு நல ஆர்வலர்கள் கடந்த ஒரு வாரமாக ஆய்வு நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் ஒரு மரப் பெட்டியில் பூனைகளை அடைத்து எடுத்துச் செல்லப்பட்டதை அடுத்து விலங்கு நல ஆர்வலர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரப்பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 1000 பூனைகளை மீட்டனர். இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டத்தில் பூனைகள் இறைச்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. அதாவது இந்த பூனைகளின் இறைச்சியை ஒரு வாரம் வரை பதப்படுத்தினால் அது பன்றி இறைச்சியை போல மாறிவிடுவதால் இதை பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்து வந்தனர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சந்தையில் பள்ளி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்யப்படும் ஒரு பவுண்ட் பூனை இறைச்சியில் விலை இந்திய மதிப்பில் 332 ரூபாய் என்றும் பூனைகள் பதப்படுத்திய பிறகு ஒவ்வொரு பூனையும் 4 முதல் 5 பவுண்ட் வரை எடை இருக்கும் என்றும் விசாரணையில் தெரிய வந்தது. இதனால் தற்போது வரை பன்றி இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சியுடன் அதிகளவில் பூனை இறைச்சி கலந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.