ஆளை சுண்டி இழுக்கும் “காலிபிளவர் 65”! அசல் சிக்கன் ப்ரை டேஸ்டில் செய்வது எப்படி?

Photo of author

By Divya

ஆளை சுண்டி இழுக்கும் “காலிபிளவர் 65”! அசல் சிக்கன் ப்ரை டேஸ்டில் செய்வது எப்படி?

புரட்டாசி மாதம் தொடங்கிவிட்டதால் பலரும் அசைவம் சாப்பிட முடியாமல் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் சிக்கன் பிரியர்களே வெறும் 20 ரூபாயில் ‘சிக்கன் 65’ சாப்பிட்டது போன்ற திருப்த்தி கிடைக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் காலிபிளவரைப் பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை கடைபிடித்து செய்து சாப்பிட்டு பாருங்கள்.சிக்கனா இல்ல காலிபிளவரா? என்று சந்தேகம் வரும் அளவிற்கு சுவை அற்புதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

காலிபிளவர் – 1(பெரியது)

மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

காரமசால் – 1 தேக்கரண்டி

இஞ்சி,பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி

கார்ன் பிளார் – 3 தேக்கரண்டி

மைதா – 3 தேக்கரண்டி

எண்ணெய் – 1/2 லிட்டர்

செய்முறை:-

1.அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 3/4 வாசி அளவு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பின்னர் அடுப்பை அணைத்து விட்டு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள காலிபிளவரை சேர்க்கவும்.

2.பின்னர் அந்த காலிபிளவரை தண்ணீர் ஈர்த்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும்.

3.அதில் கரமசால்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கலக்கி விடவும்.

4.அதனுடன் இஞ்சி,பூண்டு விழுதுகள்,கார்ன் பிளார்,மைதா ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும்.கலருக்காக காஸ்மீரி சில்லி பவுடரை சேர்த்து கொள்ளலாம்.

5.அடுப்பில் கடாய் வைத்து அதில் ப்ரை பண்ண தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் தயார் செய்து வைத்துள்ள காலிபிளவரை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுக்கவும்.

தேவைப்பட்டால் காலிபிளவருடன் நறுக்கிய பெரிய வெங்காயம் அல்லது பொரித்த கருவேப்பிலை சேர்த்து சாப்பிடலாம்.மிகவும் சுவையாகவும் சிக்கன் 65 சாப்பிட்டது போன்ற உணர்வும் கிடைக்கும்.