நமது இதயத்தில் உள்ள தமனிகளில் இரத்த ஓட்டம் தடைபடுவதை நரம்பு அடைப்பு என்கிறோம்.இதனால் உடல் சோர்வு,மார்பு பகுதியில் வலி,மார்பு வீக்கம்,மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இதயத்திற்கு கொண்டு செல்லும் தமனியில் அடைப்பு ஏற்பட்டால் நரம்பு அடைப்பு ஏற்படும்.
தமனிகளில் அடைப்பு ஏற்பட்டால் இதயத்திற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது.அதுமட்டுமின்றி நரம்பு அடைப்பால் இதயத்திற்கு போதிய இரத்தம் கிடைக்காமல் போகும்.இந்த பிரச்சனையால் உடல் சோர்வு,மார்பு வீக்கம்,மார்பு வலி,சுவாசிப்பதில் சிரமம் உண்டதால் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இதய நரம்பு அடைப்பு எதனால் ஏற்படுகிறது?
1)இதய தமனிகளில் கொழுப்பு படிதல்
2)சர்க்கரை நோய் பாதிப்பு
3)அதிக புகைப்பழக்கம் மற்றும் மதுப் பழக்கம்
4)உடல் உழைப்பு இல்லாமை
5)குடும்ப வரலாறு
6)உயர் இரத்த அழுத்த பாதிப்பு
இதய நரம்பு அடைப்பு அறிகுறிகள்:
1)மார்பு இறுக்கம்
2)நெஞ்சு வலி
3)தோள்பட்டை வலி
4)செரிமானப் பிரச்சனை
5)உடல் வலி
6)மூச்சுத் திணறல்
7)மார்பு அழுத்தம்
8)அதிகம் வியர்த்தல்
9)தலைசுற்றல் உணர்வு
இதய நரம்பு அடைப்பு குணமாக வழிகள்:
மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.ஆரோக்கிய உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் இதய நரம்பு அடைப்பு பாதிப்பை சரி செய்யலாம்.
இதய நரம்பு அடைப்பு பாதிப்பு குணமாக வீட்டு வைத்தியம்:-
தேவையான பொருட்கள்:-
1)இலவங்கம்
2)பட்டை
3)தண்ணீர்
செய்முறை விளக்கம்:-
இலவங்கம் மற்றும் பட்டை 10 கிராம் அளவிற்கு எடுத்து உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அடுத்து அரைத்த இலவங்கம் மற்றும் பட்டை பொடியை அதில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் இதய நரம்பு அடைப்பு குணமாகும்.தினமும் காலையில் எழுந்ததும் கிராம்பு ஊறவைத்த நீரை பருகினால் இதய நரம்பு பிரச்சனை குணமாகும்.