முதுகு தண்டுவட வலி வர காரணங்கள் மற்றும் அதற்கு உரிய சிகிச்சை முறைகள்!!

Photo of author

By Divya

முதுகு தண்டுவட வலி வர காரணங்கள் மற்றும் அதற்கு உரிய சிகிச்சை முறைகள்!!

Divya

நமது முதுகு தண்டுவட பகுதியில் காயம் ஏற்பட்டாலோ அல்லது எலும்பு தேய்மானமானாலோ வலி ஏற்படும்.விபத்து,காயங்கள்,சேதம் போன்ற காரணங்களால் முதுகு தண்டில் வலி ஏற்படுகிறது.

அதேபோல் தண்டுவட பகுதியில் உள்ள நரம்புகளில் அலர்ஜி ஏற்பட்டால் பலவீன உணர்வு ஏற்படும்.முதுகு தண்டுவடத்தில் கட்டிகள் இருந்தால் வலி,வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.தண்டுவட புற்றுநோய் பாதிப்பு இருந்தால் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

நம் உள்ளுறுப்புகளில் முக்கியமான ஒன்று முதுகு தண்டு.இதன் ஆரோக்கியம் குறைந்தால் நிச்சயம் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

முதுகு தண்டுவட வலிக்கான காரணங்கள்:

1.வயது முதுமை
2.காசநோய்
3.எலும்பு முறிவு
4.ஜவ்வு வீக்கம்
5.நரம்பு சேதம்
6.நோய் தாக்குதல்
7.கால்சியம் சத்து குறைபாடு

முதுகு தண்டுவட வலியால் ஏற்படும் பாதிப்புகள்:

1.முதுகு வலி
2.அமர முடியாத நிலை
3.சிறுநீர் கழிப்பதில் சிரமம்
4.உணர்ச்சியின்மை
5.மூச்சுத் திணறல்

முதுகு தண்டுவட பகுதியில் உள்ள வலியை சரி செய்ய வழிகள்:

உங்களுக்கு முதுகு தண்டுவட பகுதியில் வலி இருந்தால் மருத்துவரை அணுகி சம்மந்தப்பட்ட பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.தண்டுவட பகுதியை ஸ்கேன் செய்து என்ன பாதிப்பு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.அதேபோல் CT ஸ்கேன் செய்து தண்டுவட வலிக்கான காரணத்தை அறிந்து அதற்கான சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.பிசியோதெரபி மூலம் தண்டுவட வலி பாதிப்பை சரி செய்யலாம்.

பிசியோதெரபி மூலம் முதுகு தண்டுவட பாதிப்பு குணமாக கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் வரை ஆகலாம்.உங்களுக்கு பிசியோதெரபி மூலம் முதுகு தண்டுவட வலி குணமாகவில்லை என்றால் அறுவை சிகிச்சை மூலம் வலிக்கு தீர்வு காணலாம்.