காவிரி நீர் தொடர்பான பிரச்சனை… முதல்வர் முக.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்!! 

0
49

காவிரி நீர் தொடர்பான பிரச்சனை… முதல்வர் முக.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்!!

 

காவிரி நீர் தொடர்பான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்து காவிரி நீரை தமிழகத்திற்கு கொண்டுவர முடியாமல் போனால் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதவி விலக வேண்டும் என்று தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேட்டியளித்துள்ளார்.

 

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் தர வேண்டும் என்று காலம் காலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றது. மேலும் மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்ற கர்நாடக அரசின் முடிவுக்கு பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் எப்படியாவது மேகதாதுவில் அணை கட்டியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு உள்ளது. இந்நிலையில் தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அவர்கள் கரூரில் காவிரி நீர் தொடர்பாக பேட்டியளித்துள்ளார்.

 

காவிரி நீர் தொடர்பாக கரூரில் பேட்டியளித்த தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அவர்கள் “காவிரி நீர் தொடர்பான பிரச்சனையில் அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளும் கடந்த 28 ஆண்டுகளாக புரிதல் இல்லாமல் செயல்பட்டு வருகின்றது. மாதம் தோறும் நீர் பங்கிட்டு தரவேண்டும் என்பதற்கு பதிலாக தினமும் நீர் பங்கிட்டு தர வேண்டும் என்று தமிழகம் தீர்ப்பு பெற்றிருக்க வேண்டும். தினம்தோறும் நீர் பங்கிட்டு தரவேண்டும் என்று தீர்ப்பை பெற்றிருந்தால் டெல்டா விவசாயிகளுக்கு இந்நேரம் அந்த தீர்ப்பு  பயனுள்ளதாக இருந்திருக்கும்.

 

காவிரி நீர் தொடர்பான விஷயத்தில் தமிழக விவசாயிகளுக்கு இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த அதிமுக கட்சியும் சரி தற்பொழுது ஆட்சியில் உள்ள திமுக கட்சியும் சரி துரோகம் செய்துள்ளது.

 

தற்பொழுது குறுவை சாகுபடியில் பயிர்கள் கருகும் நிலையில் இருப்பதால் உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி தமிழக அரசு உரிய காவிரி நீரை பெற்று தர வேண்டும்.

 

அவ்வாறு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்று தராவிட்டால் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், அமைச்சர்கள் உட்பட அனைவரும் தங்களது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். பெங்களூருவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்தில் காவிரி நீர் தொடர்பாக தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேசாமல் போனது மிகுந்த வேதனை அளிக்கின்றது. அமைச்சர் முத்துசாமி அறிவித்தபடி கீழ்பவானியின் பாசன கால்வாயில் இருந்து பாசனத்திற்காக ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும்” என்று பேசினார்.